தமிழகத்தில் 11 ஆம்
வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு இல்லை
– பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவு தேர்வு மூலமாக
மாணவர் சேர்க்கை நடத்த
திட்டம் இல்லை என
பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா
காரணமாக தமிழகம் முழுவதும்
பள்ளிகள் மார்ச் மாதம்
முதல் பள்ளிகள் மூடப்பட்டன . 10 மாதங்களாக பள்ளிகள்
திறக்கப்படாத நிலையில்
10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் ஜனவரி மாதம்
19 ஆம் தேதியும், 9.11 ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள்
பிப்ரவரி மாதம் 8 ஆம்
தேதி முதல் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள்
திறக்கப்படாத காரணத்தால் 9,10,11 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு குறைந்த
நேரத்தில் பாடத்திட்டங்களை முடிக்க
முடியாத காரணத்தினால் தமிழக
அரசு மாணவர்களுக்கு தேர்வுகள்
நடத்தப்படாமல் தேர்ச்சி
வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தது. அந்த மாணவர்களுக்கு தேர்ச்சி
வழங்கப்பட்டாலும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து
அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.
இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற
நுழைவு தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளியாகியது. இந்த தகவல் குறித்து
பள்ளிக்கல்வித்துறை கூறுகையில் மாணவர்களுக்கு 11 ஆம்
வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு நடத்த
வாய்ப்புகள் இல்லை என
தெரிவிக்கப்பட்டுள்ளது.