Thursday, April 17, 2025
HomeBlogதமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் குறிப்பிடாமல் சான்றிதழ்
- Advertisment -

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் குறிப்பிடாமல் சான்றிதழ்

 

Certificate for 10th class students in Tamil Nadu without mentioning marks

தமிழகத்தில் 10 ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்
குறிப்பிடாமல் சான்றிதழ்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள்
பொதுதேர்வின்றி தேர்ச்சி
வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் 10 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு பொதுதேர்வு சான்றிதழில் மதிப்பெண் குறிப்பிடாமல் வழங்கப்பட உள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் CORONA காரணமாக பள்ளிகள்
திறக்கப்படாததால் 9,10,11 ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமல் தேர்ச்சி
வழங்கப்பட உள்ளதாக தமிழக
முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு
இதே போல 10 ஆம்
வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்ட நிலையில்
மாணவர்களுக்கு அரையாண்டு,
காலாண்டு தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு பள்ளிகள்
10
மாதங்களாக திறக்கப்படாததால் அரையாண்டு,
காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட
வில்லை. அதனால் 10 ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ்
வழங்கப்படும் போது
மதிப்பெண் வழங்கப்படாமல் குறிப்பிட
வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதே போல
11
ஆம் வகுப்பிற்கு தேர்ச்சி
வழங்கப்பட்டுள்ளது என
குறிப்பிட்டு வழங்கப்படும்.

அதே
போல 11 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழிலும் மதிப்பெண்
குறிப்பிடாமல் வழங்கப்படும் 11 ஆம் வகுப்பில் குறிப்பிட்ட பாடத்தில் மாணவர் சேர்க்கை
வழங்க அந்தந்த பள்ளிகள்
தேர்வுகள் நடத்தி மாணவர்
சேர்க்கை வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
error: Content is protected !!