கல்வி உதவித்
தொகைக்கான என்.எம்.எம்.எஸ்.
தேர்வு: விண்ணப்பங்களை இன்று
முதல் பதிவேற்றம் செய்ய
அறிவுறுத்தல்
தேர்வுக்கு எட்டாம் வகுப்பு மாணவா்கள்
விண்ணப்பித்து வரும்
நிலையில், அவற்றை இணையதளத்தில் திங்கள்கிழமை முதல்
பதிவேற்றம் செய்யலாம் என
தலைமை ஆசிரியா்களுக்கு அரசுத்
தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய
அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத்தின்கீழ் அரசுப்பள்ளிகளில் 8ம் வகுப்பு
பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாணவா்களுக்கு என்எம்எம்எஸ் தகுதித்
தேர்வு நடத்தப்படும். இதில்
தேர்ச்சி பெறுபவா்களுக்கு 9-ஆம்
வகுப்பு முதல் பிளஸ்
2 முடிக்கும் வரை மாதந்தேர்றும் ரூ.1,000 உதவித் தொகையாக
வழங்கப்படும்.
அதன்படி
நிகழ் கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு மாா்ச் 5-ஆம்
தேதி நடத்தப்பட உள்ளது.
இதற்கு விண்ணப்பப்பதிவு கடந்த
ஜனவரி 12-ஆம் தேதி
தொடங்கியது. தற்போது மாணவா்கள்
தங்கள் பள்ளிகள் மூலம்
பதிவுசெய்து வருகின்றனா். விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க வரும் ஜன.27-ஆம்
தேதி கடைசி நாளாகும்.
இந்தநிலையில் பதிவுசெய்த மாணவா்களின் விண்ணப்பங்களை பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் இன்று
முதல் (ஜனவரி 24) பிப்ரவரி
5-ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். அதேபோல்,
மாணவா்களின் தேர்வுக் கட்டணத்தை
வலைதளம் வழியாக செலுத்த
வேண்டும் என அரசுத்
தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
இதற்கான
வழிமுறைகளைப் பின்பற்றிபணிகளை உரிய காலத்தில் முடிக்க
வேண்டும் எனவும், பணிவிவர
அறிக்கையை பிப்ரவரி 9-ஆம்
தேதிக்குள் மாவட்ட தேர்வுத்துறை அதிகாரிகளிடம் சமா்ப்பிக்க வேண்டும் எனவும் தலைமையாசிரியா்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.