காய்கறி நாற்றாங்கால் ஆன்லைனில் இலவச பயிற்சி
கோவை
வேளாண் பல்கலை தோட்டக்கலை கல்லுாரியின் காய்கறி
அறிவியல் துறை சார்பில்
காய்கறி பயிர்களில் நாற்றாங்கால் தொழில்நுட்பம் குறித்த
இலவச ஆன்லைன் பயிற்சி
பிப். 2வது வாரம்
பெண்களுக்காக நடத்தப்பட
உள்ளது.
உயர்
தொழில்நுட்ப முறையில் குழித்தட்டு நாற்றாங்கால் உற்பத்தி
முறை, நாற்றாங்கால் பராமரிப்பு, கத்தரியில் ஒட்டுச்செடி உற்பத்தி,
சாதனையாளர்களின் பகிர்வுகள் ஆன்லைன் மூலம் 21 நாட்கள்
பயிற்றுவிக்கப்படும்.
டில்லி
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இதற்கான நிதியுதவியை வழங்குகிறது. டிகிரி முடித்த
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் பெண்கள் பயிற்சியில் பங்கேற்கலாம். 25 பேருக்கு மட்டுமே அனுமதி.
விருப்பமுள்ளவர்கள் vegetables@tnau.ac.in மெயிலில் உரிய
ஆணவங்களுடன் ஜன.,31க்குள்
விண்ணப்பிக்கலாம்.