Sunday, August 10, 2025
HomeBlogTN TRB தேர்வர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

TN TRB தேர்வர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

New restrictions for TN TRB selectors

TN TRB தேர்வர்களுக்கு புதிய
கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் முதுநிலை
ஆசிரியர் பணியில் 2207 காலியிடங்களை நிரப்புவதற்கு டி.ஆர்.பி.,
தேர்வில் கணினி வழி
போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.

அதன்படி
நாளை(பிப்..12) தொடங்க
உள்ள இந்தத் தேர்வு,
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்
19
ம் தேதி தவிர
20
ம் தேதி வரை
நடைபெற இருக்கிறது. மாநிலம்
முழுதும் 180 மையங்களில் 2.6 லட்சம்
பேர் கலந்துகொள்ள ஹால்
டிக்கெட் வழங்கப்பட்டு இருக்கிறது. தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபடாமல்
தடுப்பதற்கு நீட் தேர்வுக்கு இணையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

புதிய கட்டுப்பாடுகள்:

  • அதாவது, ஹால்
    டிக்கெட்டை பிரதி எடுத்து
    அதில் டி.ஆர்.பி.
    குறிப்பிட்டுள்ளபடி போட்டோ
    ஒட்டி எடுத்துச் சென்று,
    தேர்வறையில் ஒப்படைக்க வேண்டும்.
    தேர்வர்கள் முன்கூட்டியே நகல்
    எடுத்து வைத்து கொள்ள
    வேண்டும்.
  • இதையடுத்து 2 தவணை
    கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். முதல் தடுப்பூசி
    செலுத்தியிருந்தால், 2-வது
    ஊசிக்கான தவணை கடந்திருக்க கூடாது.
  • கொரோனா தடுப்பூசி
    செலுத்தாதவர்கள் தேர்வு
    நேரத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன், ஆர்.டி.பி.சி.ஆர்.,
    சோதனை செய்திருக்க வேண்டும்.
    அப்போதுபாசிட்டிவ்வாக
    இருந்தால், சுகாதாரத்துறையின் வழிமுறை
    பின்பற்றப்படும். முககவசம்,
    தனிமனித இடைவெளி பின்பற்ற
    வேண்டும்.
  • அதன்பின் வாக்காளர்
    அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுனர்
    உரிமம், ஆதார் கார்டு
    போன்றவற்றில் எதாவது
    ஒரு அட்டையை அடையாள
    முகவரிக்கு எடுத்து வர
    வேண்டும். தேர்வு தொடங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.# காவல்துறையினர் (அல்லது) டி.ஆர்.பி.,
    சார்பிலான பணியாளர்கள் தேர்வு
    மைய நுழைவு வாயிலில்
    சோதனை மேற்கொள்வர். மொபைல்
    போன், மைக்ரோ போன்,
    கால்குலேட்டர், லாக்
    டேபிள்ஸ், பேஜர், டிஜிட்டல்
    டைரி உள்ளிட்ட எந்த
    மின்னணு சாதனத்தையும் எடுத்து
    வர அனுமதி இல்லை.
  • பெல்ட் மற்றும்
    எந்த ஆபரணமும் அணிந்து
    தேர்வு மையத்திற்குள் வர
    அனுமதி கிடையாது. மேலும்
    குதிகால் உயரமான காலணிகள்
    மற்றும் ஷூ அணிந்து
    வர அனுமதி கிடையாது.
    சாதாரண காலணிகளை மட்டுமே
    தேர்வர்கள் அணிந்து வரஅனுமதி.
  • சில விடைகளை
    எழுதி கண்டுபிடிப்பதற்கு வெற்றுத்
    தாள்கள், பேனா, பென்சில்
    ஆகியவை தேர்வறையில் வழங்கப்படும். அந்த தாள்களை தேர்வு
    முடிந்த பின் தேர்வறை
    கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட வேண்டும்
  • ஆள் மாறாட்டம்
    மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments