“பச்சாத் பிளஸ்”
LIC.ன் புதிய
பாலிசி
இந்திய
ஆயுள் காப்பீட்டு கழகம்
(LIC) மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அரசுக்கு
சொந்தமான ஒரு காப்பீட்டுக் குழுமம் மற்றும் முதலீட்டு
நிறுவனம் ஆகும். இந்திய
மக்கள் தொகையான 130 கோடியில்,
சுமார் 30% நபர்கள் மட்டுமே
ஆயுள் காப்பீடு செய்துள்ளனர். இந்தியாவின் மொத்த காப்பீட்டு வர்த்தகத்தில், 75 சதவீத
இடத்தை இந்நிறுவனம் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
எல்ஐசி
நிறுவனம் பங்குச் சந்தை
சாராத, லாபத்தில் பங்கு
பெறும் தனி நபர்
சேமிப்பு திட்டமான ‘பச்சாத்
பிளஸ்’ என்ற புதிய
பாலிஸி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய
திட்டம் பயனாளிகளுக்கான சேமிப்பு
மற்றும் பாதுகாப்பு என்ற
இரண்டு அம்சங்களையும் வழங்கும்
படி உள்ளது. இந்த
திட்டத்தின் படி, பாலிஸி
முதிர்வு அடையும் போது
காப்பீட்டுத் தொகை
முழுவதும் பாலிஸிதாரர்களிடம் வழங்கப்படும். அதற்கு முன்னர் அவர்
மறைந்தால் அவரது குடும்பத்துக்கு நிதி
உதவி வழங்கப்படும்.
பிரீமியத்
தொகையை ஒரே தவணையிலோ
அல்லது ஐந்து ஆண்டுகள்
வரையிலோ செலுத்தலாம். குறிப்பிட்ட பாலிசியில் கடன் பெறும்
திட்டமும் உள்ளது. எல்ஐசி
நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.licindia.com ஆன்லைன்
மூலமாகவோ அல்லது முகமை
நிறுவனங்கள் மூலமாகவோ பாலிசியை
பெறலாம்.