Home Blog தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க புதிய சலுகை

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க புதிய சலுகை

0
New offer to renew Tamil Nadu Government Employment Office

தமிழக அரசு
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க புதிய சலுகை

அரசு
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பதிவுகளை
புதுப்பிக்காதவர்களுக்கு சில
சலுகைகளை வழங்க முடிவெடுத்துள்ள தமிழக அரசு அதற்கான
அரசாணையையும் வெளியிட்டுள்ளது.

அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்:

கடந்த
2017
முதல் 2019 வரையுள்ள ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை
புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு
புதுப்பித்தல் சலுகை
வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2017, 2018, 2019 ஆகிய
ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவினை
புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு
புதுப்பித்தல் சலுகையை
வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித்துறை இயக்குநர்
வழங்கலாம்.

இந்த
கருத்துருவினை ஆய்வு
செய்து அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 2017, 2018, 2019 ஆகிய
மூன்று ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்காதவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் கூடிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்
படி, இந்த சலுகையை
பெற விரும்புபவர்கள் மூன்று
மாதத்திற்குள்ளாக ஆன்லைனில்
புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

இந்த
சலுகை ஒரு முறை
மட்டுமே வழங்கப்படும். மூன்று
மாதங்களுக்கு பிறகு
அனுப்பப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். 1-1-2017 க்கு
முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இந்த
அரசாணையானது 2 தமிழ் நாளிதழ்களில் வெளியிடப்படும். தவிர
அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் உள்ள அறிவிப்பு பலகையில்
பொது மக்களின் தகவலுக்காக வைக்கப்பட வேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version