குருப் 2 நேர்காணலில் தேர்ச்சிபெறாதவர்களுக்குப் புதிய
சலுகை
குரூப்
2 நேர்காணலில் கலந்துகொள்பவர்களுக்குச் சலுகை
வழங்கப்படும் என
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன், குரூப்
2, குரூப் 2 ஏ தேர்வுகள்
தொடர்பாக அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளார்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இது குறித்து அவர் நமது செய்தியாளரிடம் பேசுகையில்:
முன்பு
குரூப் 2 தேர்வில், நேர்காணல்
உள்ள பதவிகளுக்குத் தரவரிசை
அடிப்படையில், நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்கள். நேர்காணலில் தகுதிபெறாவிட்டால், மீண்டும்
தேர்வெழுதி, நேர்காணலில் தகுதிபெற்றால் மட்டுமே அவர்கள் பணியில்
சேர்க்கப்படுவார்கள்.
ஆனால்
தற்போது, நேர்காணலில் தகுதிபெறாவிட்டால், குரூப் 2 ஏ
நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் சேர்க்கப்பட்டு, கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள். இந்த முறை
புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும்
பொதுத் துறையில் காலியாகும் பணியிடங்களுக்கான தேர்வுகளை
நடத்துவதற்குத் தேவையான
அளவிற்குத் தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், கூடுதல்
பணியாளர்களை நியமிக்கவும் அரசு
அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

