Saturday, April 26, 2025
HomeBlogஇலவச தையல்கலை மற்றும் ஆரி, மகம் வேலைப்பாடு பெற அழைப்பு
- Advertisment -

இலவச தையல்கலை மற்றும் ஆரி, மகம் வேலைப்பாடு பெற அழைப்பு

Call for free tailoring and ari, magam engraving

இலவச தையல்கலை
மற்றும் ஆரி, மகம்
வேலைப்பாடு பெற அழைப்பு

பெரம்பலூரிலுள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின்
கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி
மையத்தில், இலவச தையல்கலை
மற்றும் ஆரி, மகம்
வேலைப்பாடு பயிற்சி பெற
பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மையத்தின் இயக்குநா் டி. ஆனந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிப்ரவரி
21
முதல் பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடைபெறும். பயிற்சி பெற 18 முதல்
45
வயதுக்குள்பட்டவராக இருக்க
வேண்டும். மேலும் எழுத,
படிக்க தெரிந்தவராகவும், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்தவராகவும், சுயதொழில் தொடங்குவதில் ஆா்வமுள்ளவராகவும் இருக்க வேண்டும்.

தொடா்ந்து
30
நாள்கள் காலை 9.30 மணி
முதல் மாலை 5 மணி
வரை நடைபெறும் பயிற்சியின்போது, காலை மற்றும் மதிய
உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால்
அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்
அளிக்கப்படும். வங்கிக்கடன் பெற்று உடனடியாகத் தொழில்
தொடங்க வழிகாட்டப்படும்.

விருப்பமுள்ளவா்கள் பெரம்பலூா் மதனகோபாலபுரத்தில் இந்தியன் ஓவா்சீஸ்
வங்கியின் மாடியிலுள்ள கிராமிய
சுய வேலைவாய்ப்புப் பயிற்சி
மையத்தில் தங்களது பெயா்,
வயது, முகவரி, கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

குடும்ப
அட்டை, ஆதார் அட்டை
ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து
பதிவுசெய்து பிப். 21 ஆம்
தேதி நடைபெறும் பயிற்சியில் பங்கேற்கலாம்.

மேலும்
விவரங்களுக்கு, ஐஓபி
கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீஃப்
காம்ப்ளக்ஸ், பெரம்பலூா்
621 212
என்ற முகவரியில் அல்லது
04328-277896, 9488840328
என்ற எண்ணில் அலுவலக
வேலை நேரத்தில் தொடா்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -