தமிழகத்தில் இ–பதிவு
முறையில் புதிய நிபந்தனைகள்
தமிழகத்தில் CORONA நோய்த்தொற்று கடந்த
வருடம் மே மாதம்
முதல் தீவிரமாக பரவி
வருகிறது இதனால் அரசு
தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை
அறிவித்து நோய் பரவலை
தடுக்க முயற்சித்து வருகிறது.
ஊரடங்கு
காலத்தில் அவரச காரணங்களுக்கு மக்கள் பிற மாவட்டங்களுக்கு, பிற மாநிலங்களுக்கு செல்ல
மற்றும் பிற இடங்களில்
இருந்து தமிழகம் வர
இ – பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது
கொரோனா இரண்டாம் அலை
வேகமெடுப்பதால் அரசு
14 நாட்களுக்கு மாநிலம் முழுவதும்
முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இதனால்
மக்கள் அவசர காரணங்களுக்கு வெளியில் செல்ல இ
– பதிவு பெற வேண்டும்
என அரசு அறிவித்துள்ளது. மருத்துவம், இறப்பு, முக்கிய
திருமணங்கள் போன்ற காரணங்களுக்கு மட்டுமே இந்த இ–பதிவு
வழங்கப்படும் என
அரசு தெரிவித்துள்ளது. திருமணம்
என்ற காரணத்தை கூறி
ஏராளமானோர் இ – பதிவு
செய்வதால் நோய் பரவும்
வாய்ப்பு அதிகரிப்பதாக அரசு
கூறுகிறது அதனால் அக்காரணம்
நீக்கப்பட்டது. பிறகு
மக்கள் கோரிக்கையை ஏற்று
மீண்டும் அக்காரணம் இ
– பதிவில் சேர்க்கப்பட்டது. தற்போது
திருமணத்திற்காக இ–பதிவு
செய்பவர்களுக்கு புதிய
நடை முறையை அரசு
அறிவித்துள்ளது.
இதன்படி
ஒரு திருமணத்திற்க்கு ஒரு
இ – பதிவு மட்டுமே
போதுமானது. ஒருவர் மட்டுமே
அதை செய்ய வேண்டும்
என அரசு தெரிவித்துள்ளது.
ஒரு
திருமணத்திற்கு வரும்
அனைத்து நபர்களுக்கும் ஒருவர்
மட்டுமே இ – பதிவு
செய்ய வேண்டும். அந்த
இ–பதிவில் திருமணத்திற்கு வரும் நபர்களில் பெயர்,
முகவரி, வண்டி எண்,
அவர்களது ஏதேனும் ஒரு
அடையாள அட்டை, திருமண
பத்திரிக்கை, மணமக்களின் பெயர்,
விவரங்கள் போன்ற விவரங்கள்
சரியாக இருக்க வேண்டும்.
மேலும்
ஒரு திருமண விழாவிற்கு ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட
இ – பதிவுகள் செய்தால்
அவர்கள் மீது சட்டப்படி
நடவடிக்கை எடுக்கப்படும் என
அரசு தெரிவித்துள்ளது.