Home Blog தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் – ஜூன் முதல் நடத்த திட்டம்

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் – ஜூன் முதல் நடத்த திட்டம்

0

NEET Training Classes for Tamil Nadu Government School Students - Plan to conduct from June

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட்
பயிற்சி வகுப்புகள்ஜூன்
முதல் நடத்த திட்டம்

தமிழகத்தில் CORONA காரணமாக 10 மாதங்களாக
பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் 1 முதல் 11 ஆம் வகுப்பு
வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி
வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 9 முதல்
11
ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் விடுமுறை வழங்கப்பட
உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

12 ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்
பொதுத்தேர்வு மே
மாதம் 3 ஆம் தேதி
முதல் நடைபெற உள்ளது.
மேலும் அவர்களுக்கு மட்டும்
வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு
சார்பில் அரசு பள்ளி
மாணவர்களுக்கான மருத்துவ
படிப்புகளுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.
இதில் மாணவர்கள் பயன்பெற
அவர்கள் நீட் தேர்வில்
தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.

எனவே
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி
வகுப்புகள் அரசு சார்பில்
நடத்தப்படுகிறது. 12 ஆம்
வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 21 ஆம்
தேதி வரை நடைபெற
உள்ளது. இதனால் நீட்
பயிற்சி வகுப்புகளை ஜூன்
மாதம் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version