Home Blog மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே

0

 

NEET exams for medical courses are only once a year

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் ஆண்டுக்கு
ஒரு முறை மட்டுமே

நாடு
முழுவதும் உள்ள மருத்துவ
படிப்புகளுக்கான NEET
தேர்வு ஆண்டுக்கு ஒரு
முறை தேசிய தேர்வு
முகமை மூலமாக நடத்தப்படுகின்றன. மத்திய அரசு
சார்பில் நடத்தப்படும் மருத்துவ
படிப்புகளுக்கான நுழைவு
தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை
வழங்கப்படும். இந்நிலையில் மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளுக்கான JEE
நுழைவுத் தேர்வுகள் வருடத்தில் 4 முறை நடைபெறும் என
தெரிவிக்கபட்டது.

எனவே
நீட் தேர்வுகளையும் ஆண்டுக்கு
2
முறை ஆன்லைன் மூலமாக
நடத்த வேண்டும் என
கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை
மருத்துவ கல்வி அலுவலகம்
ஏற்றுக் கொண்டது. ஆனால்
இது அமலுக்கு வராத
நிலையில், வழக்கமான முறையிலேயே தேர்வுகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இது குறித்து மத்திய
சுகாதாரத்துறை மற்றும்
தேசிய தேர்வுகள் முகமை
இணைந்து நடத்திய ஆலோசனை
கூட்டத்தில் மருத்துவ படிப்புகளுக்கான NEET தேர்வுகள் வருடத்தில் ஒரு முறை மட்டுமே
நடத்தப்படும் என
முடிவெடுக்கப்பட்டது.

2021-ஆம்
ஆண்டு ஜூன் அல்லது
ஜூலை மாதத்தில் NEET
தேர்வுகள் நடைபெற உள்ள
நிலையில் இந்த தேர்வுகளுக்கான தேதி விரைவில் வெளியிடப்படும். முதுகலை படிப்புகளுக்கான NEET
தேர்வுகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இளங்கலை
மருத்துவ படிப்புகளுக்கான NEET
தேர்வுகளில் மாற்றம் வேண்டும்
என மாணவர்கள் தொடர்ந்து
கோரிக்கை வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version