Join Whatsapp Group

Join Telegram Group

மாடித்தோட்டம் அமைக்க இலவச பயிற்சி, உபகரணங்கள் வேண்டுமா?

By admin

Updated on:

மாடித்தோட்டம் அமைக்க
இலவச பயிற்சி, உபகரணங்கள் வேண்டுமா?

நிறையபேர்
கிராம வாழ்விலிருந்து நகர
வாழ்வுக்கு மாறிவிட்டதால் தாவரங்களுடான பிணைப்பற்றுபோய் வாழ்ந்து
வருகிறார்கள்.

அதற்கான
தொடர்பை உருவாக்குவதில் முக்கிய
பங்காற்றி வருகின்றன மாடித்தோட்டங்கள். நிறைய பேர்
மாடித்தோட்டம் அமைப்பதற்கு ஆர்வம் இருந்தாலும், அதை
எப்படிச் செயல்படுத்துவது, விதைகள்
எங்கு கிடைக்கும், பைகள்
கிடைக்குமிடங்கள், பயிற்சிகள் எங்காவது கிடைக்குமா என்று
தேடி வருகிறார்கள்.

சென்னை,
அண்ணா நகரில் தமிழ்நாடு
வேளாண் பல்கலைக்கழகம் மூலமாகப்
பயிற்சி அளித்து வருகிறார்கள். ஆனால், கட்டணப் பயிற்சியாக வழங்கப்படுகிறது. சென்னைக்கு மிக அருகில் பொத்தேரி
ரயில் நிலையம் அருகே
உள்ள காட்டுப்பாக்கம் வேளாண்
அறிவியல் நிலையத்தில் (Krishi Vigyan
Kendra- KVK)
மாடித்தோட்டத்துக்கு இலவசமாகப்
பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் பேராசிரியை நிஷா பேசியபோது:

காய்கறிகள் நமது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். ஒரு
நாளைக்கு ஒரு நபர்
300
கிராம் காய்கறிகளையும் 85 கிராம்
பழங்களையும் உண்ண வேண்டும்
என்கிறது ஊட்டச்சத்து ஆய்வு.
ஆனால், தற்போது ஒரு
நாளைக்கு ஒரு நபர்
120
கிராம் காய்கறிகளையே உண்ண
முடிகிறது. இதற்குப் பல
காரணங்கள் உள்ளன.

இருந்தாலும் மாடித்தோட்டம் மூலம்
அதை நாம் ஓரளவுக்கு
நிவர்த்தி செய்ய முடியும்.
நமக்குத் தேவையான காய்கறிகளை நாமே சிறந்த முறையில்
சுலபமாகப் பயிர் செய்துகொள்ள மாடித் தோட்டம் ஒரு
முக்கிய வடிகாலாக இருந்து
வருகிறது. அதனால் அரசும்
நகரப்பகுதிகளில் மாடித்தோட்டம் போடுவதை ஊக்கப்படுத்தி வருகிறது.
மாடித்தோட்டம் அமைத்தால்
வீட்டின் அழகு கூடும்.

ரசாயனங்களால் விளைவிக்கப்பட்ட காய்கறிகளைத் தவிர்த்து தரமான காய்கறிகள் கிடைக்க வழி கிடைக்கிறது. வீட்டில் பயனுள்ள வகையில்
பொழுதைக் கழிக்க மாடித்தோட்டம் மிகவும் உதவியாக இருக்கிறது.

மனதளவில்
ரிலாக்ஸ் கிடைக்கும். கிராமமாக
இருந்தாலும், நகரமாக இருந்தாலும் நமக்குத் தேவையான காய்கறிகளை நாமே பயிரிட்டுக் கொள்ளலாம்.
அடுக்குமாடி குடியிருப்புகளிலும் சுலபமாகச்
செய்யலாம். வீட்டிலுள்ள பால்கனியிலும் இதைச் செய்யலாம். அதற்கு
வழிகாட்ட எங்கள் மையத்தின்
சார்பாக தயாராக இருக்கிறோம்.

இணைப் பேராசிரியை விமலாராணி பேசியபோது:

மாடித்தோட்டம் அமைப்பதற்கு பெரிய இடம்
தேவையென்று நினைக்கிறார்கள். மாடித்தோட்டம் அமைப்பதற்கு 100 சதுர அடி
இருந்தால்கூட போதும்.
பெரும்பான்மையான மாடித்தோட்டங்கள் சதுர வடிவிலேயே
அமைக்கப்படுகின்றன. இடவசதி
குறைவாக உள்ள மாடிகளில்
செங்குத்து தோட்டங்களையும் அமைக்கலாம்.

மாடியில்
மழைநீர் வடியும் பகுதிக்கு
எதிர்முகமாக தோட்டம் அமைக்க
வேண்டும். அதிகமான வெயிலோ,
மழையோ செடிகளைப் பாதிக்காமல் இருக்க மாடியில் நிழல்
குடில் செட் போட்டுக்கொள்ளலாம்.

மாடியில்
தோட்டத்தை மூன்று வகையாக
அமைக்கலாம். திறந்தவெளி தோட்டம்,
நிழல் குடில் தோட்டம்,
இரண்டும் சேர்ந்த தோட்டம்
(
ஒரு பாதி மட்டும்
நிழல் குடில்) என்ற
வகையில் அமைத்துக் கொள்ளலாம்.
மாடியில் நேரடியாக மண்ணைக்
கொட்டி செடிகளை வைக்க
முடியாது.

அதற்காக
தரமான தார்பாலின் பைகளைப்
பயன்படுத்தலாம். இவற்றில்
சிறிதளவு மண், மட்கிய
தென்னைநார்க் கழிவு,
மண்புழு உரம், தொழு
உரம், உயிர் உரங்களைக்
கலந்து பயன்படுத்தலாம். இவை
கனமில்லாமல் இருப்பதுடன் நல்ல
முறையில் நீரை பயிர்களுக்குக் கொடுக்கும். அதிகமான நீரை
வடியச் செய்யும்.

சுழற்சி
முறையில் பருவநிலைக்கு ஏற்ற
செடிகளை வளர்க்கலாம். படரும்
காய்கறி, பூ வகைகளுக்கு குச்சிகளைக் கட்ட வேண்டும்.
கத்திரி, வெண்டை, தக்காளி,
மிளகாய், முள்ளங்கி, பீர்க்கங்காய், புடலை, பாகல், பீன்ஸ்
கொத்தவரை, கொத்தமல்லி, புதினா,
கீரை வகைகளை வளர்க்கலாம். இடவசதி அதிகமுள்ளவர்கள் ஒரு
சில மரவகைகளை வளர்க்கலாம். குறிப்பாக முருங்கை, அகத்தி,
வாழை, பப்பாளி போன்ற
மரங்களை வளர்க்கலாம்.

தமிழ்நாடு
கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலைக்கழகத்தின் கீழ்
செயல்படும் எங்கள் வேளாண்மை
அறிவியல் நிலையத்தில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான இலவச
தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும்
பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும்
மாடித்தோட்டம் அமைப்பதற்கான இடுபொருள்கள் குறிப்பாக
மாடித்தோட்ட தார்பாலின் பைகளும்
விற்பனை செய்யப்படுகின்றன. இந்தப்
பைகளில் மட்கிய தென்னை
நார்க்கழிவு, வேப்பம் பிண்ணாக்கு, மண்புழு உரம், உயிர்
உரங்கள், செம்மண் நிரப்பி
விற்பனை செய்யப்படுகிறது.

தேவைக்கேற்ப பைகளின் அளவுகளில் பெரிதாகவும் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. மாடிகளில் வளர்க்க தேவைப்படும் காய்கறி, கீரை விதைகள்
மற்றும் காய்கறி நாற்றுகள்,
பழ மரக்கன்றுகள் விற்பனைக்கு உள்ளன. மண்புழு உரம்,
பஞ்சகவ்யா, மீன் அமிலம்,
அசோலோ போன்ற மாடித்தோட்டத்துக்குத் தேவையான இயற்கை
உரங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்,

வேளாண்
அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்,

(எஸ்.ஆர்.எம்
பல்கலைக்கழகத்துக்கு எதிரில்)

காட்டாங்கொளத்தூர்– 603203

செங்கல்பட்டு மாவட்டம்

கைபேசி: 99405 42371

மின்னஞ்சல்: kvk-kattupakkam@tanuvas.org.in

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]