மதுரையில் மருந்தகங்கள் சங்கத்தின் சார்பில், மருந்து, மாத்திரைகள் டோர் டெலிவரி செய்யும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டான இந்த சூழ்நிலையில், எளிதில் மருந்துகளை பெற, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட நெருக்கடி கால குழுவினர், இந்த சேவை தொடங்கி உள்ளனர். அதன்படி, இதற்காக 2 வாட்ஸ் அப் எண்களை அக்குழுவினர் அறிமுகப்படுத்தி உள்ளனர். அந்த எண்களுக்கு வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பினால், சிரமம் இல்லாமல் இல்லத்திற்கு நேரடியாக வந்து, மருந்துகளை டோர் டெலிவரி செய்து வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Whatsapp Number: 9965374666 & 9965561793