பொறியியல் படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் கட்டாயம்
இல்லை
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E மற்றும் B.Tech படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கைக்கு 12-ஆம்
வகுப்பில் கணிதம் மற்றும்
இயற்பியல் பாடப்பிரிவு எடுத்த
மாணவர்கள் மட்டுமே மாணவர்
சேர்க்கை வழங்கப்பட்டது. இந்த
நடைமுறை பல ஆண்டுகளாக
கடைபிடிக்கப்பட்டது. இந்த
நடைமுறையில் தற்போது மாற்றம்
அறிவித்துள்ளதாக AICTE தெரிவித்துள்ளது.
இதன்படி
2020-2021 கல்வியாண்டில் 12-ஆம்
வகுப்பு படித்து முடித்த
மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.இ மற்றும்
பி.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு கணிதம்
மற்றும் இயற்பியல் பாடங்கள்
தேவை இல்லை என
AICTE தெரிவித்துள்ளது. மேலும்
மாணவர்கள் இயற்பியல், கணக்கு,
கணினி அறிவியல், வேதியியல்,
தகவல் தொழில்நுட்பம், உயிரியல்
போன்ற பாடப்பிரிவுகளில் எதாவது
மூன்று பிரிவுகளில் 45% மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றால் போதுமானது.
மேலும்
12-ஆம் வகுப்பில் வணிகவியல்,
வேளாண்மை தேர்ச்சி பெற்ற
மாணவர்களுக்கும் பொறியியல்
படிப்புகளில் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணிதம் தான்
அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் அடிப்படை
என தெரிவித்தநிலையில், தேசிய
கல்வி கொள்கையை நடப்பு
கல்வியாண்டில் அமலுக்கு
கொண்டு
வர மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது.