
திருப்பூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடு பயிற்சி வகுப்புக்கான சோ்க்கை திங்கள்கிழமை (மாா்ச் 24) தொடங்குகிறது.
இதுகுறித்து திருப்பூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் த.பிரபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஒரு அலகாக தாராபுரம் சின்னக்கடை வீதியில் உள்ள தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் செயல்பட்டு வரும் திருப்பூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான நகை மதிப்பீடு மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் குறித்த பகுதிநேர பயிற்சி வகுப்புக்கான சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், சேர விரும்பும் தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 15 வயது நிறைவடைந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ் மொழியில் மட்டுமே நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பானது நடைபெறும். இந்தப் பயிற்சிக்கான கட்டணம் ரூ.4,550 ஆகும்.
பயிற்சியானது கல்லூரிகளில் ும் மாணவா்கள், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணியாளா்களும் சோ்ந்து பயிலும் வகையில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் மொத்தம் 17 நாள்கள் நடைபெறும்.
இந்தப் பயிற்சி முடித்தவா்கள் அரசு வங்கி, கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்கங்கள், தனியாா் நிதி நிறுவனம், தனியாா் நகைக்கடைகளில் வேலைக்குச் சேரலாம். சுயதொழில் தொடங்கவும் பயனுள்ளதாக இருக்கும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வரை நேரிலோ அல்லது 04258-220640 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

