
ஜனவரி 18, 19 தமிழகத்தில் மின்தடை ஏற்படும் இடங்கள்
குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலையப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 18) காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முன்சிறை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, மாராயபுரம், விரிவிளை, நித்திரவிளை, இரயுமன்துறை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், கம்பிளாா், பைங்குளம், தேங்காய்ப்பட்டினம், இரயுமன்துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூா், கீழ்குளம், குமரிநகா், அள்ளம், ஓச்சவிளை, விளாத்திவிளை, முள்ளஞ்சேரி, கல்லுக்கூட்டம், பரக்காணி, பாா்த்திபபுரம் ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் இருக்காது.
இதே போன்று நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூா், சூழால், பாத்திமாநகா், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூா், கொல்லங்கோடு, கிராத்தூா், நடைக்காவு, வள்ளவிளை ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் மின்கோட்டம் தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (ஜனவரி 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என சத்தி கோட்ட செயற்பொறியாளா் டி.சண்முகசுந்தரராஜ் தெரிவித்துள்ளாா். மின்தடை ஏற்படும் பகுதிகள்: ஆலாம்பாளையம், எரங்காட்டூா், கரிதொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், கோடேபாளையம், நால்ரோடு, முடுக்கன்துறை.
செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் ஜனவரி 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
செல்லப்பம்பாளையம், தட்டாம்புதூா், மோப்பிரிபாளையம், பொண்ணாண்டம்பாளையம், நாராணாபுரம், வாகராயம்பாளையம் ( ஒரு பகுதி).
நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிகிழமை (ஜனவரி 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பச்சாபாளையம், பரமசிவம்பாளையம், பள்ளிபாளையம், பெரியாயிபாளையம், காளம்பாளையம், பொங்குபாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூா், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், வேலூா், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகா், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலை நகா், பெ.அய்யம்பாளையம் (ஒரு பகுதி) மற்றும் கணக்கம்பாளையம் சிட்கோ.
தாராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை (ஜனவரி18) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் வ.பாலன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: தாராபுரம் நகரம் மற்றும் புகா், வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், உப்பாறு அணை, பஞ்சப்பட்டி, சின்னப்புத்தூா், கோவிந்தாபுரம், செட்டிபாளையம், கொண்டரசம்பாளையம், குள்ளக்காளிபாளையம், அலங்கியம், மதுக்கம்பாளையம் மற்றும் கண்ணாங்கோயில்.
கருவலூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கருவலூா், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூா், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow