HomeBlogதமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000/- மே 10 முதல் வழங்கல்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000/- மே 10 முதல் வழங்கல்

தமிழக ரேஷன்
அட்டைதாரர்களுக்கு ரூ.2000/-
மே 10 முதல் வழங்கல்

தமிழகத்தில் 159 தொகுதிகளில் அமோகமாக வெற்றி
பெற்று திமுக ஆட்சியினை
பிடித்துள்ளது. நேற்று
தமிழக முதல்வராக முக
ஸ்டாலின் பதவி ஏற்றுக்
கொண்டார். பின், மக்களுக்கு உதவும் வகையில் முக்கியமான ஐந்து திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். அதில்
ஒன்று தான் மக்களுக்கு கொரோனா கால நிவாரணமாக
4000
ரூபாய் வழங்கும் திட்டம்.

இந்த
திட்டம் வரும் ஜூலை
மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், வரும் மே
10
ஆம் தேதி முதல்
அரசி அட்டைதாரர்கள் 4000 ரூபாயின்
முதல் தவணையாக 2000 ரூபாயினை
பெற்று கொள்ளலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும்
மே 10 ஆம் தேதி
முதல் தினசரி 200 பேருக்கு
டோக்கன் வழங்கப்பட்டு நிவாரண
நிதி வழங்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
திட்டத்தினை முதல்வர் முக
ஸ்டாலின் மே 10 ஆம்
தேதி துவக்கி வைப்பார்
என்று அமைச்சர் சக்கரபாணி
தெரிவித்துள்ளார்.

ரேஷன்
அட்டைதாரர்களுக்கு டோக்கன்
நேரடியாக சென்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே
போல் மக்களுக்கு முறையாக
பணம் கிடைத்துள்ளதா என்பதை
கண்காணிக்க தாசில்தார் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular