TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
கர்ப்பப்பை ஆரோக்கியமாக உள்ளதா – ஆன்லைனில் வழிகாட்டல் நிகழ்ச்சி
பெண்களுக்கு இயற்கை கொடுத்த வரம்
கர்ப்பப்பை. ஒரு பெண்ணைத்
தாயாகப் பதவி உயர்வு
பெற வைப்பதே அந்தக்
கர்ப்பப்பைதான். ஒரு
பெண் பூப்பெய்வது முதல்
மெனோபாஸ் நிலையை அடைவதுவரையான அத்தனை நிகழ்விலும் கர்ப்பப்பையின் பங்கு அளப்பரியது.
சமீபகாலமாகச் சிறிய வயதிலேயே கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வோர் எண்ணிக்கை
அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது என்கின்றன
புள்ளிவிவரங்கள். கருத்தரித்தல், கருச்சிதைவு போன்றவற்றால் கர்ப்பப்பையில் ஏற்படும் மாற்றங்கள், பிரச்னைகள் பற்றிய பயமும் பலருக்கு
இருக்கலாம்.
மங்கையராய் பிறப்பதற்கே..! – Dr.சுதா சேஷய்யனின் பெண்கள் தின
சிறப்புரை
சர்வதேச
மகளிர் தினத்தை முன்னிட்டு அவள் விகடன் மற்றும்
மதுரை மீனாட்சி மிஷன்
மருத்துவமனை இணைந்து வழங்கும்
‘கர்ப்பப்பை ஆரோக்கியம்…
அறிந்ததும் அறியாததும்…! என்ற ஆரோக்கிய
வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. மருத்துவமனையின் தலைமை
மற்றும் முதுநிலை மகளிர்
நலன் மற்றும் மகப்பேறு
சிகிச்சை மருத்துவர் எஸ்.பத்மா
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்குகிறார்.
கர்ப்பப்பையை ஆரோக்கியத்துடன் பாதுகாத்துக்கொள்வது பற்றிய ஆலோசனைகளை
அளிப்பதுடன், மாதவிடாய் தொடங்கி
புற்றுநோய் வரையான அனைத்து
பிரச்னைகளுக்கான தீர்வுகள்
குறித்தும் தெளிவாக விளக்குவார்.
நிகழ்வில்
பங்கேற்கும் வாசகர்களின் சந்தேகங்களுக்கும் மருத்துவர் நேரடியாகப் பதிலளிப்பார். மார்ச்
6-ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 முதல் நண்பகல்
12 மணி வரை நிகழ்ச்சி
நடைபெறும். இந்த நிகழ்வில்
கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.
For Registration: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


