Home Blog IRCTC – ரயில்வே டிக்கெட்டுகளை இனி முன்பதிவு செய்வது ரொம்ப ஈஸி முழு விவரங்கள்

IRCTC – ரயில்வே டிக்கெட்டுகளை இனி முன்பதிவு செய்வது ரொம்ப ஈஸி முழு விவரங்கள்

0

IRCTC - ரயில்வே டிக்கெட்டுகளை இனி முன்பதிவு செய்வது ரொம்ப ஈஸி முழு விவரங்கள்


ரயில் பயணங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய எண்ணற்ற வழிமுறை உள்ளன. நீங்கள் நேரடியாக புக்கிங் கவுண்டர்களுக்கு சென்று டிக்கெட் புக்கிங் செய்யலாம். இணையதளம் அல்லது ரயில்வே ஆப் மூலமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். தற்போது இந்த வசதிகளுக்கு முத்தாய்ப்பாக மற்றொரு வசதியை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், அதிகாரப்பூர்வ சாட்பாட் உதவியுடன் நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் அடிப்படையில் செயல்படக் கூடிய AskDisha என்ற சாட்பாட் ஒன்றை இந்திய ரயில்வே அறிமுகம் செய்தது. இந்த திஷா என்பது பயனாளர்களிடம் டிஜிட்டல் முறையில் கலந்துரையாடி உதவி செய்யக் கூடியதாகும். இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டபோது, வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு அளிப்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. அதாவது கேள்விகள் மற்றும் விளக்கங்கள் ஆகியவை இதில் இடம்பெற்றிருந்தன.

டிக்கெட் முன்பதிவு செய்யலாம்:

முன்புபோல டிக்கெட் முன்பதிவு செய்ய நீங்கள் அதிகம் சிரமம் கொள்ளத் தேவையில்லை. உங்களுக்கு உதவிடும் வகையில் இந்த திஷா சாட்பாட் சேவையிலேயே குறிப்பிட்ட இடங்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஆப் போன்றவற்றுக்கு செல்லாமலே நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும். இதனால், டிக்கெட் முன்பதிவு என்பது மிக எளிமையாக முடிந்து விடுகிறது.

தினசரி ஐஆர்சிடிசி இணையதளத்தை 10 லட்சம் பயணிகள் பார்வையிடுகின்றனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கவுண்டர்களுக்கு நேரடியாக செல்லும் பயணிகளை தவிர்த்து, இந்த 10 லட்சம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

IRCTC Website: Click Here

சேவைக் கட்டணம் உண்டா?

சாட்பாட் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும் சர்வீஸ் கட்டணம் உண்டுதான். ஆனால், அது மிக அதிகமாக இருக்குமோ என்று நீங்கள் கவலை அடையத் தேவையில்லை. ஏற்கனவே இணையதளத்தில் முன்பதிவு செய்ய என்ன அளவில் சேவைக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறதோ, அதே கட்டணம் தான் இங்கும் வசூல் செய்யப்படுகிறது.

நீங்கள் எதன் வழியாக கட்டணம் செலுத்துகிறீர்கள் என்பதை பொருத்து கட்டணம் மாறும். அதாவது, யூபிஐ மூலமாக படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகளுக்கு ரூ.10 என்ற அளவிலும், ஏசி பெட்டிகளுக்கு ரூ.15 என்ற அளவிலும் டிக்கெட் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. பிற வகைகளில் கட்டணம் செலுத்துகிறீர்கள் என்றால் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டிற்கு ரூ.20 மற்றும் ஏசி வகுப்புக்கு ரூ.30 என்ற அளவில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

பயணிகளின் வசதி கருதி பல்வேறு வசதிகளை ரயில்வே துறை செய்து கொடுத்து வருகிறது. குறிப்பாக, நாடெங்கிலும் 500 ரயில் நிலையங்களில் வாட்ஸ் அப் மூலமாக உணவு ஆர்டர் செய்யும் வசதி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version