Join Whatsapp Group

Join Telegram Group

தமிழகத்தில் முதியோருக்கான கட்டணமில்லா சேவை எண் அறிமுகம்

By admin

Updated on:

தமிழகத்தில் முதியோருக்கான கட்டணமில்லா சேவை எண்
அறிமுகம்

நாட்டில்
CORONA தொற்று பரவலினால்
பொதுமக்கள் பல வகையான
பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அவற்றை சரி செய்வதற்காக மத்திய மற்றும் மாநில
அரசுகள் பல முக்கிய
சலுகைகள் மற்றும் திட்டங்களை அமல்படுத்து வருகின்றது. அந்த
வகையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டில் உள்ள
முதியோர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு
மத்திய சமூக நீதி
அமைச்சகம் எல்டர் லைன்
என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.

இதற்கான
அழைப்பு மையங்களை தமிழ்நாடு,
.பி., .பி.,
ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய
மாநிலங்களில் அண்மையில்
தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில்
இருந்து தெலுங்கானா மாநிலத்தில் இந்த வசதி செயல்பட்டு வருகிறது. 2021 மே மாத
இறுதிக்குள் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய
சமூக நீதி அமைச்சகம்
தெரிவித்துள்ளது.

14567 என்ற
கட்டணமில்லா தொலைபேசி எண்ணில்
அழைப்பு மையங்களை முதியோர்
தொடர்பு கொள்ளலாம். தேவையுள்ள
அனைத்து முதியோர்களும் இந்த
திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல்
28
ம் தேதி முதல்
எல்டர் லைன் திட்டம்
தொடங்கப்பட்டுள்ளது.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]