மத்திய அரசுத்துறைகளில் 10 லட்சம் காலிப்பணியிடங்கள் – அரசு
விளக்கம்
இந்தியாவில் கடந்த 2018 – 2019ஆம்
ஆண்டில் மத்திய ரயில்வே
துறையில் மட்டும் 3 லட்சம்
வேலைகள் காலியாக உள்ளதாக
நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணத்தை தெரிவிக்கையில் பணியாளர்களின் சம்பளம்
மற்றும் சலுகைகளை அரசு
சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது
1.5 மில்லியன் அரசு பதவிகளில்,
வெறும் 1.2 மில்லியன் பதவிகள்
மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.
இதில்
ஒரு மில்லியனுக்கும் அதிகமான
காலிப்பணியிடங்களை மத்திய
உள்துறை அமைச்சகம் நிரப்பியுள்ளது. தொடர்ந்து மத்திய அரசின்
அனைத்து துறைகளிலும் மிக
முக்கியமானதாக கருதப்படும் பாதுகாப்பு துறையில் அதிகளவு
காலியிடங்கள் உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
பாதுகாப்பு துறையின் 6,33,139 மொத்த
காலிப்பணியிடங்களில் 60% வரை
பணியாளர்களை நிரப்பாமல் இருப்பதாக
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு
காரணமாக, 2019 ஆம் நிதியாண்டில் சுமார் 2 லட்சம் கோடி
ரூபாய் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. இதை
முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 7.4% அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
தொடர்ந்து மத்திய அரசின்
இந்த செலவின பட்டியலில் ரயில்வே துறை, பாதுகாப்பு துறை, அஞ்சலகம் மற்றும்
வருவாய் துறை உள்ளிட்ட
5 முக்கிய துறைகள் 80 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
இதே
பணியாளர்கள் அடிப்படையில் கணக்கிடுகையில் ரயில்வே அமைச்சகம் 36.7%, உள்துறை
அமைச்சகம் 24%, அஞ்சலக துறை
5.7% உடன் உள்ளது. இந்த
செலவினங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 33% அதிகரித்துள்ளதாக தரவுகள்
கூறுகிறது. மேலும் அரசின்
மொத்த செலவினங்களில், 2015ம்
நிதியாண்டில் சம்பளம்
மற்றும் அலவன்ஸ்களுக்கு 40% மற்றும்
2019ம் நிதியாண்டில் இவை
71% ஆக அதிகரித்துள்ளது. அதே
நேரத்தில் அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி (DA) கடந்த
2015ம் ஆண்டில் 41% ஆகவும்,
2019 ஆம் ஆண்டில் 6% ஆகவும்
குறைந்துள்ளது.