Home Blog பிரதமரின் விவசாயிகளுக்கு நிதியுதவித் திட்டத்தில் டிச.15ம் தேதிக்குள் பதிவு புதுப்பிக்க அறிவுறுத்தல்

பிரதமரின் விவசாயிகளுக்கு நிதியுதவித் திட்டத்தில் டிச.15ம் தேதிக்குள் பதிவு புதுப்பிக்க அறிவுறுத்தல்

0
Instructions to renew registration in Prime Minister's Farmers' Financial Support Scheme by Dec. 15

TAMIL MIXER
EDUCATION.
ன்
விவசாய செய்திகள்

பிரதமரின் விவசாயிகளுக்கு
நிதியுதவித்
திட்டத்தில்
டிச.15ம் தேதிக்குள் பதிவு புதுப்பிக்க அறிவுறுத்தல்

பிரதமரின் விவசாயிகளுக்கு
நிதியுதவி
வழங்கும்
திட்டத்தில்
உதவித்
தொகையைத்
தொடா்ந்து
பெற
தங்களது
ஆதார்
விவரப்
பதிவுகளை
டிச.15ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என வேளாண் துறை இணை இயக்குநா் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு
4
மாதங்களுக்கு
ஒரு
முறை
ஊக்கத்
தொகையாக
ரூ.2000
வீதம்
ஆண்டுக்கு
ரூ.6000
வேளாண்
இடுபொருள்கள்
வாங்கும்
வகையில்
வழங்கப்பட்டு
வருகிறது.

இதுவரை 12 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில்
மின்னணு
முறையில்
வாடிக்கையாளரை
அல்லது
விவசாயியை
தெரிந்துகொள்ள
கேஒய்சி
பதிவு
செய்து
கொள்வது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் தொடா்ந்து ஊக்கத் தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரிபார்ப்பது
அவசியமாகும்.
இதற்கு
அருகிலுள்ள
சேவை மையத்திலோ அல்லது அஞ்சல் அலுவலகத்தையோ
அணுகி
பதிவை
புதுப்பித்துக்
கொள்ளலாம்.

தங்களது ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பிஎம்கிசான் வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து கடவுச்சொல் மூலம் சரிபார்ப்பு செய்யலாம்.

மேலும் சரியான விவரங்கள் அளிப்போருக்கு
வேளாண்
இணை
இயக்குநா்
அலுவலகத்தில்
தொடங்கப்பட்டுள்ள
இம்மையத்திலேயே
பெயா்
விவரம்
புதுப்பிக்கப்பட்டு
வருகிறது.

எனவே, அருகில் உள்ள சேவை மையங்கள், அஞ்சல் அலுவலகங்களில்
டிசம்பா்
15
ம்
தேதிக்குள்
தங்கள்
பதிவைப்
புதுப்பித்து
இணைத்துக்
கொண்டால்
மட்டுமே
தொடா்ந்து
இத்திட்டத்தில்
பயன்பெற
முடியும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version