TAMIL MIXER EDUCATION.ன்
திருநெல்வேலி செய்திகள்
நெல்லை அரசு
அருங்காட்சியகத்தில் கல்வெட்டு
பயிற்சி
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இம்மாதம்
30,31 ஆகிய இரு தினங்கள்
குறுகிய கால கல்வெட்டு
பயிற்சி வழங்கப்படுகிறது.
திருநெல்வேலி, வட்டார மக்களுக்கு தொல்லியல்
சார்ந்த ஆா்வத்தினை மேம்படுத்தும் வகையிலும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட
கல்வெட்டினை வாசிக்கும் வகையிலும்
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் குறுகிய கால
கல்வெட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் கல்வெட்டு வாசித்தல் தொடா்பான
பழங்கால எழுத்துக்கள் குறித்த
கற்றல் பயிற்சி, கல்வெட்டு
வாசிப்பு கள ஆய்வு
பயிற்சி, நேரடியாக கல்வெட்டு
படி எடுத்து வாசிக்கும் பயிற்சி ஆகியவை அளிக்கப்பட உள்ளது.
இதற்கான
தொடக்கவிழா திருநெல்வேலி அரசு
அருங்காட்சியகத்தில் சனி,
ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூலை
30, 31) காலை 10 மணிக்கு முழு
நேரமாக நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சியில் கல்லூரி
மாணவ–மாணவியா், ஆய்வு
மாணவா்கள், வரலாற்று ஆா்வலா்கள், பொதுமக்கள் என விருப்பம்
உள்ள அனைவரும் கலந்து
கொள்ளலாம்.
பங்கேற்பு
சான்றிதழ் வழங்கப்படும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே
பங்கு பெற அனுமதிக்கப்படுவா். எனவே, பங்கேற்க
விரும்பும் அனைவரும் கட்டாயம்
முன்பதிவு செய்ய வேண்டும்.
முன்பதிவு
செய்வதற்கு திருநெல்வேலி அரசு
அருங்காட்சியகத்தில் நேரிலோ
அல்லது 7502433751 என்ற எண்ணிலோ
தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here