கல்வி உதவித்தொகை உச்ச வரம்பு உயர்வு
கல்லுாரி
மாணவர்களுக்கான கல்வி
உதவித்தொகை திட்டத்தில், பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு
உயர்த்தப்பட்டுள்ளது.அரசு
ஒதுக்கீட்டில் படிக்கும்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த
மாணவ, மாணவியருக்கு கல்வி
உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பு, இரண்டு லட்சம் ரூபாயாக
இருந்தது. இதை 2.50 லட்சம்
ரூபாயாக உயர்த்த அரசு
உத்தரவிட்டுள்ளது.முதுகலை,
பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு, கால்நடை
மருத்துவம், பல்மருத்துவம், சித்தமருத்துவம், வேளாண்மை, பொறியியல், சட்டம்
படிக்கும் மாணவர்களின் பெற்றோரது
ஆண்டு வருமான உச்சவரம்பு, 2.50 லட்சம் ரூபாயாக
உயர்த்தப்பட்டுள்ளது.