தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு முக்கிய
அறிவிப்பு
தமிழக
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும்
3 வாரங்கள் மட்டுமே உள்ள
நிலையில் தேர்தல் களம்
தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பல அரசியல் கட்சிகள்
தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு
வருகின்றனர். மேலும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அந்தந்த
கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு
கேட்டு வீதியில் செல்கின்றனர்.
இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வரும் அலுவலர்கள் அந்த பணிகளில் ஈடுபட்டு
வருவதாக பல புகார்கள்
எழுந்துள்ளது. மேலும்
அரசு அலுவலர்களின் வீடுகளிலோ,
வாகனங்களிலோ கட்சி சின்னங்கள் இருக்க கூடாது. மேலும்
போக்குவரத்து கழக
ஊழியர்கள் எந்த ஒரு
அரசியல் கட்சிக்கும் ஆதரவாக
எந்த உதவி அல்லது
இருப்பிடமோ வழங்கப்பட கூடாது.
தேர்தல்
அதிகாரிகளாக பணியாற்றுவோர் எந்த
ஒரு கட்சி சார்ந்து
இல்லாமல் நடுநிலையாக சுதந்திரமாக பணியாற்ற வேண்டும். இந்த
கட்டுப்பாடுகளை மீறுவோர்
மீது தேர்தல் விதி
134-ன் படி ஒழுங்கு
நடவடிக்கை எடுக்கப்படும்.