இலக்கணம் – 500 முக்கிய வினா விடைகள் (TNPSC, Other Exams Very Important)
TNPSC, SSC, RRB, மற்றும் அரசு தேர்வுகளுக்கான “இலக்கணம் – 500 முக்கிய வினா விடைகள்” PDF இப்போது பதிவிறக்கம் செய்யவும்! இந்த PDF, இலக்கணம் பற்றிய முக்கிய வினா விடைகள் மற்றும் பொதுவான அறிவு உடைய 500 வினா விடைகள் கொண்டுள்ளது. இது TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான மாணவர்களுக்கு முக்கிய தமிழ் இலக்கணம் சார்ந்த வினா விடைகளை ஒரே இடத்தில் வழங்குகிறது.
இந்த 500 முக்கிய வினா விடைகள் உங்களுக்கு இலக்கணம் பற்றிய அறிவுகளை தெளிவாக உணர வைக்கும். இதில் உள்ள தமிழ் இலக்கணம், சொல் வகைகள், பொது தமிழ், பொருள் இலக்கணம் மற்றும் இலக்கண விதிகள் போன்ற தலைப்புகளுக்கு சம்மந்தப்பட்ட கேள்வி விடைகள் விரிவாக உள்ளன.
இந்த PDF தொகுப்பின் சிறப்பம்சங்கள்:
- 📚 500 முக்கிய இலக்கணம் வினா விடைகள்
- 📝 TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு பயனுள்ள இலக்கணம் குறிப்பு
- 🎯 தமிழ் இலக்கணம், பொது தமிழ், மற்றும் சொல் வகைகள்
- 💡 விளக்கங்களுடன் சரியான பதில்கள் மற்றும் வினா விடைகள்
1. சந்திர ஓடம் வானக்கடலில் நீந்தியது – இதில் வந்த அணி
உருவக அணி
2.“மாணவர்களுக்கு ஒழுக்கமே உயிரெனப்படும்” இதில் வந்த நான்காம் வேற்றுமைப் பொருள்
தகுதி
3. எழுவாய் தொக்கு நிற்கும் வாக்கியம்
அறம் செய விரும்பு
4. பன்மை விகுதி பெற்று வராத சொல்
மணல்
5. தோன்றல் விகாரப் புணர்ச்சிக்கு உதாரணம்
செய்நன்றி
6. “தந்தையுடன் மைந்தன் வந்தான்” என்பதில் உள்ள “உடன்”
4ம் வேற்றுமை
7. உயர்திணை இருபாற் பொதுப்பெயர்
மேதை
8. நாள் + குறிப்பு என்பதை சேர்த்து எழுத வருவது
நாட்குறிப்பு
9. ஆண், பெண் இருபாற்கும் பொதுவாக வழங்காத சொல்
நம்பி
10. ஆண்டு + திவசம் என்பதைப் புணர்த்தினால்
ஆட்டைத்திவசம்
11. “மலையிற் சிறியது குன்று” இதில் ‘மலை’ ஏற்றுள்ள வேற்றுமை
5ம் வேற்றுமை
12. உவமைத் தொகை ஒன்றைக் குறிப்பிடுக
பவளவாய்
13. பெயரெச்சம் இடம் பெறும் வாக்கியம்
வந்த மாடு
14. “இப்பரிசு எனது நண்பியால் அனுப்பப்பட்டது” என்பது
செயற்பாட்டு வினை வாக்கியம்
15. “மக்களிடையே ஒற்றுமை ஓங்குக” என்பது
வியங்கோள் வாக்கியம்
16. கெடுதல் விகாரப் புணர்ச்சிக்கு உதாரணம்
மரவேர்
17. எழுத்துப் போலிக்கு உதாரணம் அல்லாதது
கந்தல்
18. விளித் தொடருக்கு உதாரணம்
இராமா வா
19. “மதுமிதா உதைபந்தை உதைத்தாள்” ‘உதைபந்து’ என்பது
வினைக்கதொகை
20. “யாகாவாராயினும் நாகாக்க வேண்டும்” என்பது
கூற்றுவாக்கியம்
21. “மதியாதார் தலைவாசல் மிதியாதே” இதில் எழுவாய்
நீ
22. “திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்” என்ற வாக்கியம்
செய்வினை
23. “இங்கே வந்தவனைக் . காணவில்லை” இதில் ‘வந்தவனை’ என்பது
வினையாலணையும் பெயர்
24. எழுவாய் தொக்கு நிற்கும் வாக்கியம்
தூணை போனாலும் பிணை போகாதே
25. “யான் வந்தான்” என்பது
இடவழு
26. குற்றியலுகரச் சொல்
ஆண்டு
27. இருநோக்கு இவளுண்கண் உள்ளது
எண்வழுவமைதி
28. பொற்றொடி என்பது
பண்புத்தொகை
29. “அப்பெண் வெள்ளை உடுத்தி வந்தாள்”
குணவாகு பெயர்
30. விகாரம் கொண்ட சொல்
வந்தனன்
31. உயிர்மெய் வல்லெழுத்துக்கள்
72
32. உயிர்மெய் குற்றெழுத்துக்கள்
90
33. உயிருடனோ மெய்யுடனோ சேராத எழுத்து
ஆய்தம்
34. கவ்வியது என்பதில் உள்ள இடைநிலை
ய்
35. “முற்றத்து மா” என்பதன் சாரியை
அத்து
36. வினைச் சொல்லின் காலங்காட்டும் ஒர் உறுப்பு
இடைநிலை
37. வினைச்சொல்லோடு பெயர்ச்சொல் காணப்பட்டு நிற்கும் தொடர் மொழி
நிலம் பிளந்தது
38. “பசுவின் வால்” என்ற தொடரில் ‘பசுவின்’ என்பதில் வந்த ‘இன்’
வேற்றுமை உருபு
39. பெயராகவும் வினையாகவும் அமையக் கூடியது
கல்
40. எழுவாயும் செயற்படுபொருளும் மறைந்து நிற்கும் வாக்கியம்
நன்றாய் படி
41. வாக்கியத்தினை காட்டுவது
போ
42. “வானக்கடலில் வெள்ளியோடம் ஒன்று கண்டேன்” ‘வானக்கடல்” என்பதில் உள்ள அணி
உருவகம்
43. எச்சமாயும் முற்றாகவும் வழங்கும் வினைச்சொல்
உண்ணும்
44. “கரியமனிதன்” என்பதில் ‘கரிய’ என்பது
குறிப்பு வினைப் பெயரெச்சம்
45. உம்மைத் தொகை
சேர, சோழ, பாண்டியர்
46. புளியம்பழம் என்பதில் இடம்பெற்றுள்ள அம்” என்பது
சாரியை
47. செயற்படுபொருள் அற்ற வாக்கியம்
அனுமன் அசோகவனம் சென்றான்
48. “குளநெல்” என்பதில் இடம்பெற்றுள்ளது எவ்வகைப் புணர்ச்சி
கெடுதல்
49. “வா” என்னும் அடியாகப் பிறந்த பெயர்
வாயில்
50. ஆசிரியர் – இதைப் பிரித்து எழுதினால்
ஆசு + இரியர்
51. “ஆசிரியரைக் கண்டதும் சீனியன் சால்வையை எடுத்து அரையிற் கட்டுனான்” இதில் வந்துள்ள ஆகுபெயர்
அரை
52. தமிழ் நெடுங்கணக்கு ஒழுங்கில் அமையாத எழுத்துக் கூட்டம்
ச, ம, ப, ற
53. ஆக்கப் பெயராக வருவது
வானொலி
54. “கூலி வேலை செய்தான்” என்பதில் ‘கூலி வேலை’ என்பது
நான்காம் வேற்றுமைத் தொகை
55. சந்தி பிரிக்கும் வகையால் இருவேறு பொருள் கொள்ளத்தக்க ஒரு புணர்மொழி
பொன்னன்று
56. “தாயோடறுசுவை போம்” இதில் ‘அறுசுவை’ என்பது
உவமைத் கொகை
57. “இன்று விடுமுறை என்று மாணவர் நினைத்தனர்” இதில் உள்ள இடைச்சொல்
என்று
58. “நல்லன்” என்பது
குறிப்பு வினை முற்று
59. பெயராகவும் வினையாகவும் வழங்கும் ஒரு சொல்
பாய்
60. பயனிலை மறைந்து நிற்கும் வாக்கியம்
துறவிக்கு வேந்தன் துரும்பு
61. எண் அடையை ஏற்று வந்த பெயர்ச்சொல்
முன்று முகம்
62. பெயராக மட்டும் வழங்கும் ஒரு சொல்
செல்லம்மா
63. இருபாற்கும் பொதுவாக வழங்காத சொல்
பாங்கி
64. “கண்ணன் பாட வசந்தா ஆடினாள்” இதில் ‘பாட’ என்பது
தெரிநிலை வினையெச்சம்
65. எச்சமாகவும் முற்றாகவும் வழங்கும் ஒரு சொல்
விழும்
66. “வேற்கண்ணாள் வந்தாள்” – ‘வேற்கண் என்பது’
வேற்றுமைக் தொகை
67. “அருமந்த கொய்யாப் பழத்தை அணில் அரித்து விட்டது” – “அருமந்த’ என்பது
மரூஉ
68. இருதிணை” ஐம்பால் மூவிடத்துக்கும் பொதுவான தெரிநிலை வினைமுற்று
இல்லை
69. கருங்குழல் ஆடினாள் என்பது
அன்மொழித் தொகை
70. மொழிக்கு இறுதியில் நின்று விண்ப்பொருளை உணர்த்தும் எழுத்து
ஆ, ஓ
71. பெயர்ச் சொல்லின் சிறப்பம்சம்
வேற்றுமை ஏற்றல்
73. பாடினான் என்ற சொல்லின் பகுதி
பாடு
74. “சுடுசரம் வீழ்வதன் முன்னமே போமின்” இதில் ‘சுடுசரம்’ என்பது
வினைத்தொகை
75. பகுபத உறுப்புக்கள் ஆறும் பெற்று வந்த சொல்
நடந்தனன்
76. எச்சமாயும் முற்றாகவும் வழங்கும் ஒரு வினைச் சொல்
உண்ணும்
77. சந்திரன் + உதயம் என்பதைச் சேர்த்து எழுதினால்
சந்திரோதயம்
78. சுட்டெழுத்து அல்லாதது
ஒ
79. திரிதல் விகாரப் புணர்ச்சிக்கு உதாரணம்
பாற்குடம்
80. தனித்துப் பொருள் தராத சொல்
இடை
81. உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் வந்த ஏவல் வினைமுற்று
வாராய்
82. “பசி வந்தால் பத்தும் பறந்து போம்” – “பத்து என்பது
அளவையாகு பெயர்
83. பகாப்பதச் சொல்லுக்கு உதாரணம்
மண்
84. மொழிக்கு முதலில் வரக்கூடிய உயிர்மெய் எழுத்துக்கள்
ம, ந, ப
85. “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற வாக்கியத்தில் எழுவாய்
வையகம்
86. பெயரேச்சமும் வினையெச்சமும் சேர்ந்து நிற்கும் வாக்கியம்
பாய்ந்து வந்த மாடு
87. “கள்ளக் கந்தன் வெள்ளைப் பூனையை வெட்டுக்கொன்றான்”
இதில் வரும் செயப்படுபொருள் அடைமொழி
பூனை
88. அஃறிணை என்னும் பதத்தைப் பிரித்தால்
அல் + திணை
89. பலர்பால் விகுதிகள் மட்டும் உடையது
அர், ஆர், மார், கள்
90. காரண இடுகுறிப் பெயராக அமைவது
காற்குடி
91. கருவி, கருத்தா, உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் வேற்றுமை
8ம் வேற்றுமை
92. உகரத்தின் மாத்திரை குன்றாத சொல்
கதவு
93. இருவேறு எழுவாய் தொக்கு நிற்கும் வாக்கியம்
பாடு, ஆடுகிறேன்
94. வினையாக மட்டும் வரும் சொல்
தேடு
95. பால் பகா அஃறிணைப் பெயர்
தேங்காய்
96. தமிழ் எழுத்துக்களில் மிக அருமையாகப் பயன்படுத்தப்படும் எழுத்து
ஆய்த எழுத்து
97. எழுத்துப் போலிக்கு உதாரணம்
நேயம்
98. பகுதி இரட்டித்துக் காலங்காட்டுவன
புக்கான், விட்டான்
99. “கடற்காற்று உடலுக்கு இதமாக இருந்தது” – இங்கே கடற்காற்று என்பது.
வேற்றுமைத் தொகை
100. நீ வந்தாள் என்பது
இடவழு
101. வல்லின மெய் எழுத்துக்களை மட்டும் கொண்டது
ட்,ற்
102. உயிர் மெய் நெடில் எழுத்துக்களின் மாத்திரையானது
2
103. இடைத்தொடர் குற்றியலுகரமாக அமைவது
சால்பு
104. நகைத்தல் என்னும் சொல்லின் அடி
நகை
105. மொழியிறுதியில் மட்டும் வினாப் பொருள் உணர்த்திவருவது
ஆ, ஒ
106. வேற்றுநிலை மெய்மயக்கத்திற்கு மட்டும் உரிய மெய்கள்
விடை கமெண்டில் தெரிவிக்கவும்
107. தெரிநிலை வினைப்பகுதிகளைப் பிறவினைப் பகுதிகளாக்குவது
வி, பி
108. காலங்காட்டா இடைவினைகள் எனப்படுவன
பெயரிடைநிலை
109. பிரியா விளையாடினாள்
எழுவாய்த் தொடர்
110. காரண இடுகுறிப் பெயரானது
நாற்காலி
111. “திருவாசகம் ஓதினான்” என்பது
கருவியாகுபெயர்
112. கொடைப் பொருள் எவ்வேற்றுமைக்குரியது?
4
113. பெயரேச்ச விகுதிகள்
அ, உம்
114. செயப்படுபொருள் குன்றாத வினையடிகள்
படி, பாடு
115. இயல்புப் புணர்ச்சியானது
பாலப்பம்
116. கெடுதல் விகாரம் மட்டும் இடம்பெற்றுள்ள தொடர்
கருமேகம்
117. பண்புத் தொகையானது
வெண்சோறு
118. வாணி ஆடினாள் என்பது
எழுவாய்த்தொடர்
119. உடன்படுமெய் தோன்ற புணர்ந்த சொற்றொடர்
கையிருப்பு
120. இருபெயரொட்டுப் பண்புத் தொகைக்கு உதாரணம் அல்லாதது
இன்சொல்
121. “சிலவற்றை, நாட்டிற்கு” இவற்றில் இடம்பெற்றுள்ள சாரியைகளை எடுத்துக்காட்டுவது
அற்று, இன்
122. விற்றேன் என்ற சொல்லின் சரியான சந்தி பிரிப்பு
வில்+ற்+ன்
123. போனேன், ஓடியது ஆகிய சொற்களில் இடம்பெற்றுள்ள இறந்தகால இடைநிலைகள்
ன், இ
124. கண்டேன், சென்றது ஆகிய சொற்களில் இடம்பெற்றுள்ள இறந்தகால இடைநிலைகள்.
ட், ற்
125. நஞ்செயல் என்ற சொல்லின் சரியான சந்தி பிரிப்பு
நம் + செயல்
126. விட்டான் என்ற சொல்லின் சரியான பதப்பிரிப்பு
விடு + ட் + ஆன்
127. சுயம், இணையம், படிப்பித்தல், மூங்கில் இவற்றுள் பகுபதங்களைத் தெரிக.
இணையம், படிப்பீத்தல்
128. கலை. ஓய், பரவு, எரி இவற்றுள் தன்வினையாகவும் பிற வினையாகவும் பயன்படும் வினையடிகள்
கலை, எரி
129. நட, படி, ஓடு. வெட்டு இவற்றுள் செயப்படுபொருள் குன்றிய வினையடிகள்
நட, ஓடு
130. “மதிலேறிப் பாயநதவன இவ்வாக்கியத்தில் வரும் “பாய்ந்தவன்” என்ற சொல்
வினையாலணையும் பெயர்
131. இனி, திணி, பனி, தனி, கனி இவற்றுள் ஏவல் வினையடுகள் எவை?
திணி, தணி
132. கல், நில், வெண், தண் இவற்றுள் தெரிநிலை வினையடிகளை எடுத்துக்காட்டுக
கல், நில்
133. வினையடிகளில் குறிப்பு வினையடியினை எடுத்துக் காட்டுக.
தண்
134. படு, உண் என்னும் துணைவினைகளைப் பெற்று வரும் வினை
செயப்பாட்டு விணை
135. கட்டு. பற, நல், மயங்கு, பார் இவற்றுள் குறிப்பு வினையினை எடுத்துக்காட்டுக.
விடை கமெண்ட் செய்யவும்
136. “பார்” என்பது துணைவினையாக வந்துள்ள தொடர்
வந்து பார்த்தான்
137. “அது திரும்பியது” இத்தொடரில் இடம்பெறும் வினை
பிறவினை
138. வா, தா, நட, எழுது இவற்றுள் செயப்படுபொருள் குன்றா வினைகள்
தா, எழுது
139. “சங்கீதம் நம் உள்ளங்களைக் கட்டுப்படுத்துகிறது” இவ்வாக்கியம்
செய்வினை வாக்கியம்
140. சூழல் மாசடைவதால் பெருந்தீமை ஏற்பட்டுக்கொண்யுருக்கிறது. இதில் “இரு” என்பது
துனைவினை
141. செத்தேன், விற்றார்கள், கண்டான், தந்தாள் இவ்வினை முற்றுக் களின் வினையடிகள்
சா, வில், கண், தா
142. “ஆறுமுகம் அவளை ஒரு சனக்கும்பலுக்கூடாகக் கையில் பிழுத்து நடத்திக்கொண்டு சென்றான்” இவ்வாக்கியத்தின் பயனிலை
பிறவினை
143. வாவேன், நில்லேன் ஆகிய வினைச்சொற்கள் எவ்வகைச் சொல்
விருப்பு ஏவல்வினை
144. “வினாசித்தம்பி சரீரத்தைச் சுமக்க முடியாவிட்டாலும் தொட்டுக் கொண்டு நடந்து வந்தார்” இவ்வாக்கியத்தில் வந்துள்ள நிபந்தனை வினையெச்சம்
முடியாவிட்டால்
145. “இம்மாதிரி மண்ணெண்ணெய் நெருக்கடி ஏற்படாத காலங்களில் அந்த அறைக்குத்தான் முதல் ராத்திரி” இதில் இடம் பெற்றுள்ள எதிர்மறைப் பெயரெச்சம்
ஏற்படாத
146. “படித்த பையன்” என்பது எவ்வகைச் சொல்
பெயரெச்சம்
147. அவர் வீரபுருஷர்களையும் அழியாத சித்திரங்களையும் எழுத் தோவியமாக தீட்டுவதை விட்டுவிட்டார்” இதில் இடம் பெற்றுள்ள எதிர்மறைப் பெயரெச்சம்
அழியாத
148. கூட்டு வினையாக வரும் சொல்
கைபிடித்தான்
149. செயப்படுபொருள் குன்றாவினையாக இடம்பெறும் சொல்
படித்தான்
150. “பொலிசார் திருடனைக் கைது செய்தார்கள்” இங்கு கைதுசெய் என்பது
கூட்டுவினை
151. மாணவர்களே எழுதுங்கள்
விளித்தொடர்
152. படத்தைப் பார்த்தான்
வேற்றுமைத்தொடர்
153. அழகியது அம்மலர்
வினைமுற்றுத்தொடர்
154. எழுதாத கவிதை
பெயரெச்சத்தொடர்
155. மெல்லப்போனாள்
வினையெச்சத்தொடர்
156. இனி வருவேன்
இடைச் சொற்றொடர்
157. சாலச்சிறந்தது
உரிச்சொற்றொடர்
158. விகாரப் புணர்ச்சிக்கு உதாரணம்
மரம் + கள்
159. நிறைகுடம்
வினைத்தொகை
160. வட்ட மேசை
பண்புத்தொகை
161. மலர்க்கை சிறந்தது
உவமைத்தொகை
162. எண்ணெழுத்து இகழேல்
உம்மைத்தொகை
163. யகர, மெய் உடம்படு மெய்யாகத் தோன்றுவதற்கு உதாரணம்
கிளியிறகு
164. உயிர்முன் மெய் புணர்தலுக்கு உதாரணமாக அமைவது
கலைக்கூடம்
165. மெய், முன் உயிர் புணர்தலுக்கு உதாரணமாக அமைவது
மண்ணால
166. திரிதல் புணர்ச்சிக்கு உதாரணமாக அமைவது
மரங்கள்
167. கெடுதல் விகாரத்திற்கு உதாரணமாக அமைவது
தீராப்பசி
168. தோன்றல் விகாரத்திற்கு உதாரணமாக அமைவது
கிழக்குப் பல்கலைக்கழகம்
169. உயிர்முன் உயிர் புணர்தலுக்கு உதாரணமாக அமைவது
பூவிதழ்
170. மெய் முன் மெய் புணர்தலுக்கு உதாரணமாக அமைவது
மரக்கொப்பு
171. ‘தெய்வமே அருள் செய்க’ என்பது
வியங்கோள் வினைமுற்று
172. “தேவரும் வந்தனர்” இதில் வந்துள்ள ‘உம்’ இடைச்சொல் தரும் பொருள்
எச்சப்பொருள்
173. “எப்போதும் படிப்பேன்” இதில் வந்துள்ள உம் இடைச்சொல் தரும் பொருள்
முற்றுப்பொருள்
174. “கொலைகாரனை விடவும் கொடியவன்” இதில் வந்துள்ள உம் இடைச்சொல் தரும் பொருள்
இழிவுச் சிறப்புப்பொருள்
175. “நான் கட்டிலில் படுத்ததும் தூங்கிவிடுவேன்” இதில் வந்துள்ள உம் இடைச்சொல் தரும் பொருள்
உடனடித் தன்மைப்பொருள்
176. “லிபியா மீதான தாக்குதலில் எவ்வளவோ பொருட்கள் நாசமாகின” இதில் இடம்பெற்றுள்ள ஓகார இடைச்சொல் தரும் பொருள்
மிகைப்பொருள்
177. “நாளைக்கு யாராவது வருவார்கள்” இதில் வந்துள்ள ‘ஆவது’என்ற இடைச்சொல் தரும் பொருள்
திடக்குறிப்பின்மைப் பொருள்
178. “படிக்கவோ வந்தாய்” இதில் வந்துள்ள ‘ஓ’ கார இடைச்சொல் தரும் பொருள்
ஒழியிசைப் பொருள்
179. “இவளோ இளையவள்” இதில் வந்துள்ள ‘ஓ’ கார இடைச்சொல் தரும் பொருள்
பிரிநிலை
180. கைலாசபதியின் நூல்களில் ஒன்று “அடியும் முடியும்” இதில் வந்துள்ள இடைச்சொல்
உம்
181. பாரதியும், கம்பனும், வள்ளுவனும் தமிழில் மகாகவிகள். இதில் வந்துள்ள உம் இடைச்சொல் தரும் பொருள்
எண்ணுப்பொருள்
182. சிறுகதையை ______ நாவல்கள் சமூக யதார்த்தங்களை ஆழமாக சித்தரிக்கின்றன. இடைவெளியில் வரக்கூடிய பொருத்தமான சொல்
விட
183. “அவர்களுள் இவளே படிப்பில் உயர்ந்தவள்” இதில் வந்துள்ள ஏ’கார இடைச்சொல் தரும் பொருள்
பிரிநிலைப்பொருள்
184. “நானே கள்வன்” இதில் வந்துள்ள ‘ஏ’கார இடைச்சொல் தரும் பொருள்
எதிர்மறைப்பொருள்
185. “உண்டே கடவுள்” இதில் வந்துள்ள ஏகார இடைச்சொல் தரும் பொருள்
தேற்றப்பொருள்
186. “ஓ…ஓ கொடியவள் இவள்” இதில் வந்துள்ள ஓ’கார இடைச்சொல் தரும் பொருள்
இழிவுச் சிறப்புப்பொருள்
187. “அகலிகை வந்தாள்” என்பது எவ்வகைத் தொடர்
எழுவாய்த் தொடர்
188. உறுமீன் என்பது எவ்வகைத் தொடர்
உரிச்சொற்றொடர்
189. மற்றொன்று என்பது எவ்வகைத் தொடர்
இடைச்சொற்றொடர்
190. “தாழ்குழல் ஆடினாள்” என்பது எவ்வகைச் சொல்
அன்மொழித்தொடர்
191. “வன்சொல் பேசினார்” இதில் வந்துள்ள வன்சொல் என்பது
பண்புத்தொகை
192. “புகழுடம்பு” என்பது எவ்வகைச் சொல்
வினைத்தொகை
193. “சாரைப்பாம்பு” என்பது எவ்வகைச் சொல்
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
194. “மான்விழி” என்பது எவ்வகைச் சொல்
உவமைத்தொகை
195. “பிறைநுதல் வியர்வை சிந்த அக்ஷயா ஓடினாள்” இங்கு பிறைநுதல் என்பது
உவமைத் தொகை
196. பூங்குழல் வந்தாள்
அன்மொழித்தொகை
197. தமிழ் எழுத்துக்களின் தொகை
247
198. “கடிமாலை” என்ற சொல்லின் கடி என்ற உரிச்சொல் தரும் பொருள்
வாசனை
199. “இ”கரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல்
இடுப்பு
200. சந்தியக்கரம் என அழைக்கப்படுகின்ற எழுத்துக்கள்
ஐ, ஒள
201. ‘உகரம்’ இதழ் குவியாது ஒலிக்கும் சொல்
கொக்கு
202. தமிழிலுள்ள உயிர்மெய்க்குறில் எழுத்துக்கள் எத்தனை?
90
203. தமிழிலுள்ள உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை?
126
204. சார்பெழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை?
369
205. ஒற்றெழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை?
19
206. தமிழிலுள்ள நெட்டெழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை?
133
207. தமிழிலுள்ள குற்றெழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை?
95
208. உயிரளபெடைக்கான மாத்திரை
3
209. “கொக்கு” என்ற சொல்லில் இடம்பெறும் உகரத்தின் மாத்திரை
விடை கமெண்ட் செய்யவும்
210. உடன்நிலை மெய்மயக்கம் இடம்பெறும் சொல்
வண்ணம்
211. ‘செத்தான்’ என்ற செல்லின் வினையடியாக வருவது
சா
212. ஈரிதழ் ஒலிகள் இடம்பெறும் சொல்
கம்பன்
213. “க”கரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல்
திங்கள்
214. “ச” கரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல்
பஞ்சம்
215. “ட்” கரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல்
நடை
216. “த” கரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல்
தோல்வி
217. “ப” கரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல்
மார்பு
218. மென்றொடர்க் குற்றியலுகரமாக அமைவது
வண்டு
219. வன்றொடர்க் குற்றியலுகரமாக அமைவது
காற்று
220. இடைத்தொடர்க் குற்றியலுகரமாக அமைவது
நல்கு
221. மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வருகின்ற வினாவெழுத்து
ஏ
222. சுடுசோறு என்ற சொல் எவ்வகைத் தொகையாகும்
வினைத்தொகை
223. ஐகாரக் குறுக்கமாக அமைவது
மையல்
224. உயிரளபெடையாக அமைவது
படா௮
225. மொழிக்கு முதலில் மட்டும் வினாப்பொருளை உணர்த்தி வரும் எழுத்து
எ, யா
226. மொழிக்கு இறுதியில் மட்டும் வினாப்பொருளை உணர்த்தி வரும் எழுத்து
ஆ, ஓ
227. மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வினாப்பொருளை உணர்த்தி வரும் எழுத்து
ஏ
228. ஈரிதழ் ஒலிகள் என அழைக்கப்படும் எழுத்துக்கள்
ப், ம்
229. உதட்டுப் பல் ஒலி என அழைக்கப்படும் எழுத்துக்கள்
வ்
230. பல் ஒலிகள் என அழைக்கப்படும் எழுத்துக்கள்
த், ந்
231. நுனி அண்ண ஒலிகள் என அழைக்கப்படும் எழுத்துக்கள்
ல், ர்
232. வளை நா ஒலிகள் என அழைக்கப்படும் எழுத்துக்கள்
ட், ண், ழ், ள்
233. அண்ண ஒலிகள் என அழைக்கப்படும் எழுத்துக்கள்
ச், ஞ், ய்
234. கடை அண்ண ஒலிகள் என அழைக்கப்படும் எழுத்துக்கள்
க், ங்
235. வருடொலி என அழைக்கப்படும் எழுத்து
ர்
236. ஆடொலி என அழைக்கப்படும் எழுத்து
ற்
237. றகரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல்
வெற்றிலை
238. மெல்லின மெய் எழுத்துக்களை மட்டும் கொண்ட தொகுதி
விடை கமெண்ட் செய்யவும்
239. இடையின மெய் எழுத்துக்களை மட்டும் கொண்ட தொகுதி
ய், ல்
240. உயிர்மெய் குறில் எழுத்துக்களின் மாத்திரை
1
241. உயிர்மெய் நெடில் எழுத்துக்களின் மாத்திரை
2
242. ஆய்த எழுத்தின் மாத்திரை
1/2
243. ஒற்றளபெடைக்கான மாத்திரை
1
244. மெய்யெழுத்துக்களின் மாத்திரை
1/2
245. ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம் ஆகியவற்றுக்கான மாத்திரை
1
246. ஆய்த குறுக்கம், மகரக் குறுக்கம் ஆகியவற்றுக்கான மாத்திரை
1/4
247. குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகியவற்றுக்கான மாத்திரை
1/2
248. “நகைஇ” இது சார்பெழுத்தின் எவ்வகையைச் சார்ந்தது
உயிரளபெடை
249. “திரள்ள் சேனை” இல் வந்துள்ள “திரள்ள்” என்பது
ஒற்றளபெடை
250. அஃது, இஃது, எஃது ஆகிய சொற்கள்
ஆய்தத்தொடர் குற்றியலுகரம்
251. ஒளகாரக் குறுக்கமாக அமைவது
வெளவால்
252. சொல்லின் இடையில் ஐகாரக் குறுக்கம் அமைந்து வருவது
கலைஞன்
253. உயிர்த் தொடர் குற்றியலுகரமாக அமைந்து வருவது
வயிறு
254. நெடிற்றொடர் குற்றியலுகரமாக அமைந்து வருவது
தூது
255. இடைத்தொடர் குற்றியலுகரமாக அமைந்து வருவது
பெய்து
256. வன்றொடர் குற்றியலுகரமாக அமைந்து வருவது
சிரிப்பு
257. மென்றொடர் குற்றியலுகரமாக அமைந்து வருவது
சான்று
258. எதிர்காலத் தெரிநிலை முற்றுக்கள்
ப்ப், ப், வ
259. ஆய்தக்குறுக்கமாக அமைந்து வருவது
அஃறிணை
260. இவன் எம் ஊரன்
குறிப்பு வினைமுற்று
261. “தெய்வம் தொழாஅள்” இதில் வந்துள்ள சார்பெழுத்து எவ்வகையைச் சார்ந்தது
உயிரளபெடை
262. மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து
ஏ
263. ஈரிதழ் ஒலிகளாக கொள்ளப்படும் எழுத்துக்கள்
ப், ம்
264. ‘எ’கரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல்
எளிமை
265. “களவும் கற்றுமற” இவ்வாக்கியத்தில் வரும் உம் இடைச்சொல் தரும் பொருள்
எதிர்மறைப்பொருள்
266. அறிவழகி வந்தாள் என்பது
அன்மொழித்தொகை
267. “மயில் ஆடியது அழகாயிருந்தது” இதில் வந்துள்ள ‘ஆடியது’ என்பது
தொழிற்பெயர்
268. கடலலை என்பது எவ்வகைப் புணர்ச்சி
இயல்புப்புணர்ச்சி
269. “கொன்றான்” என்ற சொல்லின் பகுதி
கொல்
270. தலையின் இழிந்த மயிரனையர். இதில் இடம்பெற்றுள்ள வேற்றுமை
5ம் வேற்றுமை
271. வாவேன், வாங்களேன் என்பன எவ்வகையான வினை
விருப்பு, ஏவல்
272. அவர் 1975 களில் வெளிநாடு சென்றுவிட்டார். இதில் வழுவாக இடம்பெற்றுள்ள சொல்
1975 களில்
273. காலங்காட்டா இடைநிலைகள் எனப்படுவன
பெயரிடை நிலை
274. ஆசிரியர் இரண்டு புத்தகங்கள் தந்தார். இதில் இரண்டு புத்தகங்கள் என்பது
எண்அடை
275. கமலா பாடினாள் என்பது
எழுவாய்த்தொடர்
276. இரு பெயரொட்டுப் பண்புத் தொகைக்கு உதாரணம் அல்லாதது
சிறுவர் பாடசாலை
277. அவன் நாயால் கடியுண்டான்
செயப்பாட்டுவினை
278. “மழையாவது பெய்கிறதாவது” இதில் ஆவது இடைச்சொல் தரும்பொருள்
நடவாமைப்பொருள்
279. ஆய்தக் குறுக்கமாக அமைவது
அஃறிணை
280. நின்றான் என்ற சொல்லின் பகுதி
நில்
281. உடம்படுமெய் தோன்ற புணர்ந்த சொற்றொடர்
மாவிலை
282. உடம்படுமெய் தோன்றாமல் புணர்ந்த சொற்றொடர்
இந்தப்புத்தகம்
283. இருபெயரொட்டுப் பண்புத் தொகைக்கு உதாரணம் அல்லாதது
பால்நிலவு
284. பண்புத் தொகைக்கு உதாரணம் அல்லாதது
முதியோர் இல்லம்
285. உம்மைத் தொகைக்கு உதாரணம் அல்லாதது
தலை வணங்கினார்
286. உவமைத் தொகைக்கு உதாரணம் அல்லாதது
குளிர்நிலவு
287. “குன்றக்குமுறல்” என்பது எவ்வகைச் சொல்
வேற்றுமைத்தொகை
288. “கல்வியின் பெரியவன் கம்பன்” இதில் வந்துள்ள வேற்றுமை உருபு தரும் பொருள்
ஏதுப்பொருள்
289. “எனது கருமை” இதில் வந்துள்ள வேற்றுமை உருபு
6ம் வேற்றுமை
290. “கோழியைப் பார்க்கிலும் சேவல் அழகானது”. இவ்வேற்றுமை தரும் பொருள்
ஒப்புப்பொருள்
291. “மரம் வேரோடு சாய்ந்தது”. அதில் வந்துள்ள வேற்றுமை உருபு தரும் பொருள்
உடன்நிகழ்ச்சி
292. மக்காள் கேளீர்! இதில் வந்துள்ள வேற்றுமை தரும் பொருள்
விளிப்பொருள்
293. “மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்தான்” இதில் வந்துள்ள ஆல் உருபு தரும் பொருள்
காரணப்பெயர்
294. “அக்கதை காற்றோடு காற்றாக போய்விட்டது” இதில் வந்துள்ள வேற்றுமை தரும் பொருள்
விடையடை ஆக்கிப்பொருள்
295. குற்றியலுகரப் புணர்ச்சிக்கு உதாரணமாக அமைவது
நாக்கை
296. வேற்றுமைப் புணர்ச்சிக்கு உதாரணமாக அமைவது
என்னை
297. அவை நல்ல புத்தகங்கள் – இதில் வந்துள்ள ‘நல்ல’ என்பது
தனிப்பெயரடை
298. நான் மெல்ல வருகிறேன். இதில் வந்துள்ள ‘மெல்ல” என்பது
தனிவினையடை
299. “அவன் இளமையாக இருக்கிறான்” இதில். வந்துள்ள ‘இளமையாக’ என்பது
கூட்டுவினையடை
300. “நான் வாசித்த புத்தகம்” இதில். வந்துள்ள ‘வாசித்த’ என்பது
எச்ச அடை
301. “அந்தப் புத்தகம் என்னுடையது” இதில் ‘அந்த’ என்பது
சுட்டடை
302. “குருவியினது கூடு” இதில் வந்துள்ள வேற்றுமை தரும் பொருள்
உடைமைப்பொருள்
303. “பிரசன்னா உழைப்பால் உயர்ந்தான்” _ இதில் வந்துள்ள வேற்றுமை தரும் பொருள்
காரணப்பெயர்
304. “அரிசி மாவால் செய்த பிட்டு” இதில் வந்துள்ள வேற்றுமை தரும் பொருள்
மூலப்பொருள்
305. “கண்ணன் பாட்டு பாரதியாரால் பாடப்பட்டது” இதில் வந்துள்ள வேற்றுமை தரும் பொருள்
கருத்தாப் பொருள்
306. “கத்தியால் மரத்தை வெட்டினான்” இதில் வந்துள்ள வேற்றுமை உருபுகள்
ஆல், ஐ
307. “தகுதிப்பொருள்” எவ்வேற்றுமைக்குரியது
4ம் வேற்றுமை
308. ஒத்தல், ஒப்பு பொருள்கள் எவ்வேற்றுமைகளுக்கு உரியது
இரண்டாம், ஐந்தாம்
309. நின்று, இருந்து முதலான சொல்லுருபுகள் எவ்வேற்றுமைக் குரியது
5ம் வேற்றுமை
310. ஆக, பொருட்டு, நிமித்தம் முதலான சொல்லுருபுகள் எவ் வேற்றுமைக்குரியது
4ம் வேற்றுமை
311. “சூரியன் உதித்தான்” எத்தனையாம் வேற்றுமை
1ம் வேற்றுமை
312. படித்த மனிதன்
பெயரெச்சம்
313. போனால் வரமாட்டாய்
வினையெச்சம்
314. பெயரடையாக இடம்பெற்றுள்ள சொல்
ஒலிகடல்
315. “பாலும் தெளிதேனும் பாகும்” இத்தொடரில் வந்துள்ள உம்” இடைச்சொல் தரும் பொருள்
எண்ணல்பொருள்
316. வினைத்தொகையைக் குறித்து நிற்கும் சொல்
சுடுசோறு
317. தன்வினையாக வரக்கூடிய சொல்
உயர்ந்தவன்
318. “நான் சம்பளத்துக்கு வேலை செய்கிறேன்” இவ்வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள வேற்றுமை உருபு எப்பொருளில் வந்துள்ளது
காரணப்பொருள்
319. “பத்துப் பேரும் வந்தனர்” இதில் உம் இடைச்சொல் எப்பொருளில் வந்துள்ளது
முற்றுப்பொருள்
320. வினாச் சொல் ஒன்றைக் குறிப்பிடுக.
யாங்கு
321. “மரம் ஏறி விழுந்தவன் எழுந்து ஓடினான்” இத்தொடரில் வினை யாலணையும் பெயர்
விழுந்தவன்
322. “வீட்டுன் கதவை உடைத்தான்” இவ்வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள வேற்றுமை உருபுகள்
இன், ஐ
323. “வானே நிலவே பிறவே” இதில் ஏகாரம் என்ன பொருளில் வந்துள்ளது?
எண்ணல் பொருள்
324. அசைகள் பிரதான எத்தனை வகைப்படும்?
2 வகை
325. தேமாங்காய் என்பது
நேர் நேர் நேர்
326. கருவிளங்காய் என்பது
நிரைநிரைநேர்
327. செய்யுளுக்கு இசையாக அமைவதும் செய்யுளை ஒழுங்கு படுத்துவதும் எது?
சீர்
328. சீர்களின் மொத்த எண்ணிக்கை:
07
329. சீரொடு சீரைச் சேர்த்துச் செய்யுளடிகளை அமைக்கும்போது அவற்றுக்கிடையில் உருவாகும் இயைபே _____ எனப்படும்.
தளை
330. தளையின் வகைகள் எத்தனை?
07
331. இரண்டு முதலிய சீர்களைக் கொண்டு முடிவது _____ ஆகும்
அடி
332. அடி எத்தனை வகைப்படும்
5
333. எழுவாய் வேற்றுமை என அழைக்கப்படுவது
முதலாம்
334. போலி எழுத்தாலான சொல்லைத் தருக.
ஐஞ்ஞூறு
335. சுட்டெழுத்தினால் ஆக்கப்பட்ட சொல்லை எழுதுக.
இந்த மரம்
336. வினாவெழுத்தால் அமைந்த சொல்லைக் குறிப்பிடுக.
எங்கே
337. “தடாகங்களில் அழகிய தாமரைப் பூக்கள் பூத்துக் குலுங்கின” இதில் வந்துள்ள பெயரடையினைக் குறிப்பிடுக.
அழகிய
338. “மாணவர்கள் விரைவாக ஓடினர்” இதில் வந்துள்ள வினையடை யினைக் குறிப்பிடுக.
விரைவாக
339. சொல்லாக்கத்தில் சொல்லின் இறுதியில் இடம்பெறாத உயிர் எழுத்துக்கள்
எ, ஒ, ஔ
340. “மடங்ங்கலந்த” இதில் வந்துள்ள சார்பெழுத்து எவ்வகையைச் சார்ந்தது.
ஒற்றளபெடை
341. “வாவெண்ணிலா” இதில் வந்துள்ள சார்பெழுத்து எவ்வகையைச் சார்ந்தது.
உயிரளபெடை
342. பெய்து, மார்பு என்பன எவ்வகையான குற்றியலுகரங்கள்
இடைத்தொடர் குற்றியலுகரம்
343. “அவன் வந்தது” இதில் வந்துள்ள வழு
திணைவழு
344. “அவள் வந்தான்” இதில் வந்துள்ள வழு
பால்வழு
345. “அவன் வந்தேன்” இதில் வந்துள்ள வழு
இடவழு
346. “நேற்று வருவேன்” இதில் வந்துள்ள வழு
காலவழு
347. “யானை இடையன் எங்கே” இதில் வந்துள்ள வழு
மரபுவழு
348. “வானக்கடலிடை வெண்ணிலாவே” இதில் வந்துள்ள அணி
உருவக அணி
349. புதிய வானம் புதிய பூமி – எங்கும் பனிமழை பொழிகிறது, நான் வருகையிலே என்னை வரவேற்று வண்ணப் பூமழை பொழிகிறது” இதில் வந்துள்ள அணி
தற்குறிப்பேற்ற அணி
350. “ரமணன் தேன் போன்ற குரலால் இனிமையாகப் பாடினான்” அதில் வந்துள்ள அணி
உவமை அணி
351. “புயல்தொடு நெடுநிலை மாடத்தின்னகர் புகலுமா றெனவோ” இதில் வந்துள்ள அணி
உயர்வு நவிற்சி அணி
352. “முல்லை சூடினாள்” என்பது
பொருளாகுபெயர்
353. “பொரியல் உண்டான்” என்பது
தொழிலாகுபெயர்
354. “எனக்கு இரண்டு மீட்டர் போதும்” என்பது
நீட்டலளவையாகுபெயர்
355. “நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்பது
எண்ணலளவையாகுபெயர்
356. “பயிற்றங்காய் நடக்கிறது” என்பது”
உவமையாகுபெயர்
357. “சிவபுராணம் ஓதினான்” என்பது
கருவியாகுபெயர்
358. “பாரதியாரைப் படித்தான்” என்பது
கருத்தாவாகுபெயர்
359. “கொழும்பு சிரித்தது” என்பது
இடவாகுபெயர்
360. “அரை இறாத்தல் தாருங்கள்” என்பது
எடுத்தலளவையாகுபெயர்
361. “கருநீலம் சூடினாள்” என்பது
பண்பாகுபெயர்
362. “இளவேனில் சிரித்தது” என்பது
காலவாகுபெயர்
363. “புகையிலை உண்டான்” என்பது
சினையாகுபெயர்
364. “ஐந்து லீட்டர் வாங்கிவா” என்பது
முகத்தலளவையாகுபெயர்
365. “பாக்கு வெட்டி” என்பது குறிக்கும் பெயர்
காரணப்பெயர்
366. “நாற்காலி” என்பது குறிக்கும் பெயர்
காரண இடகுறிப்பெயர்
367. “வானொலி” என்று குறிக்கும் பெயர்
காரண இடுகுறிப்பெயர்
368. “அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்கிறது” இது
தனிவாக்கியம்
369. “கம்பன் ஒரு கவிச்சக்கரவர்த்தி என்பது இலக்கிய ஆய்வாளர்களின் கருத்தாகும்.” இவ்வாக்கியம்
கலப்பு வாக்கியம்
370. “ஆனந்தி கவனமாக படித்துப் பரீட்சையில் சித்தியடைந்தாள்” இவ்வாக்கியம்
கூட்டுவாக்கியம்
371. “சீதையின் அழகுதான் என்னே” இவ்வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
372. “கடவுளே நம்மைக் காத்தருளுக” இவ்வாக்கியம்
வியங்கோள் வாக்கியம்
373. சாரியை பெற்றுப் புணர்ந்துள்ள சொல்
புளியங்காய்
374. உடம்படுமெய் தோன்ற புணர்ந்த சொற்றொடர்
கையிருப்பு
375. கெடுதல் விவகாரம் மட்டும் இடம்பெற்ற தொடர்
கருமேகம்
376. வேற்றுமைப் புணர்ச்சி இடம்பெற்ற சொற்றொடர்
புத்தகம் படித்தான்
377. இயல்பு புணர்ச்சி இடம்பெற்ற சொற்றொடர்
காலடி
378. இருவேறு பொருள் தரக்கூடிய சொல்
உள்ள மிளகாய்
379. “என் மன்னவனும் நீயோ” இதில் வந்துள்ள ‘உம்’ இடைச்சொல் தரும் பொருள்
உயர்வு சிறப்புப் பொருள்
380. “வளநாடு” என்பதை விரித்து எழுதினால்
வளத்தையுடைய நாடு
381. “நிலமே, நீரே, தீயே, வளியே, வானே எனப் பூதங்கள் ஐந்தாம்” இதில் வந்துள்ள ‘ஏ’ கார இடைச்சொல் தரும் பொருள்
எண்ணுப் பொருள்
382. அறிஞன் (அறி + ஞ் + அன்)
பெயர் பகுபதம்
383. கற்றான் (கல் + ற் + ஆன்)
வினைப்பகுபதம்
384. அவ்வை (ஒளவை)
இலக்கணப் போலி
385. நல்ல மனிதன். சிறிய கண்கள்
பெயர் அடைகள்
386. செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம்
உயர்வு நவிற்சி அணி
387. ஒரு பொருளை இயற்கையில் உள்ளவாறே அழகுபடக் கூறுவது
தன்மை நவிற்சி அணி
388. கற்றிந்தார் கேண்மை நுனியிற் கரும்பு தின்றற்றே
வேற்றுமை அணி
389. அன், ஆன், அள், ஆள், அர், ஆர், து, வை, கள் என்பன
விகுதி உருபுகள்
390. த், ட், ற். இன், நின்று, கிறு, ப், வ், ஞ், முதலியன
இடைநிலை உருபுகள்
391. அன், இன், அத்து, அற்று, இற்று, அ, உ என்பன
சாரியை உருபுகள்
392. போல, புரைய, மான, ஒப்ப, நிகர, அன்ன முதலியன
ஒப்புப்பொருளை உணர்த்துவன.
393. கொல், மாற்று, மா, மியா, மோ, அத்தை, அரோ, இசின் முதலியன
அசைநிலை இடைச்சொற்கள்
394. அ, இ. உ, ௭, ஒ என்பன
உயர்க்குறில் எழுத்துக்கள்
395. ஆ. ஈ, ஊ, ஏ. ஐ. ஓ. ஒள என்பன
உயர்நெடில் எழுத்துக்கள்
396. கசடதபற, ஙஞணநமன / யரலவழள என்பன
வல்லின / மெல்லின / இடையினம்
397. அஃது, எஃது என்பன
ஆய்த எழுத்துக்கள்
398. உயிர் எழுத்து 12, மெய்யெழுத்து 18, உயிர்மெய் எழுத்து 216, ஆய்த எழுத்து 01 என்பன
தமிழ் நெடுங்கணக்கு
399. ஐ, ஸ, ஹ, ஷ, க்ஷ, ஸ்ரீ என்பன
கிரந்த எழுக்துக்கள்
400. அன், ஆன், மன், மான், ன் என்னும் விகுதி பெற்று வருவன
ஆண்பாற் பெயர்கள்
401. அள், ஆள், இ, ள் எனும் விகுதி பெற்று வருவன
பெண்பாற் பெயர்கள்
402. ஆர், கள், மார், ர் எனும் விகுதி பெற்று வருவன
பலர்பாற் பெயர்கள்
403. து எனும் விகுதி பெற்று வருவது
ஒன்றன்பாற் பெயர்கள்
404. வை, அ, கள் எனும் விகுதி பெற்று வருவன
பலவின்பாற்பெயர்
405. ஆக்கக் கூறுகளாய் பகுக்க முடியாத சொல்
பகாப்பதம் (தீ)
406. வினைத் தொகைக்கு உதாரணம்
முக்குணம்
407. “நான்கு பேரும் வந்தனர்” இதில் ‘நான்கு’ என்பது
மென்தொடர் குற்றியலுகரம்
408. “உகரம்” இதழ் குவிந்து ஒலிக்கும் சொல்
குயில்
409. ‘இ’கரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல்
இளமை
410. உடனிலை மெய்மயக்கம் இடம்பெறும் சொல்
வணக்கம்
411. ‘ச’கரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல்
மச்சம்
412. புவியியல், பொருளியல், அளவையியல் என்பன
ஆக்கப்பெயர்
413. தவறான புணர்ச்சி இடம்பெறும் சொல்
நவீனக் கவிதை
414. கோடை காலம் என்பது
இருபெயரொட்டு பண்புத்தொகை
415. படர்க்கை, உயர்திணை, ஆண்பால், ஒருமை வினைமுற்று
அதிசயித்தான்
416. படர்க்கை, உயர்திணை, பெண்பால், ஒருமை வினைமுற்று
இருந்தாள்
417. படர்க்கை, உயர்திணை, பலர்பால், பன்மை, வினைமுற்று
வீற்றிருந்தனர்.
418. நிலைமொழியும் வருமொழியும் சேரும்போது சில எழுத்துக்கள் அற்றுப்போதல்
கெடுதல் விகாரம் [பவளவாய்)
419. மேற்கோள் குறி (“……”)
அனுவாதக்குறி எனப்படும்.
420. பயனிலையை விசேடிக்கும் அடைமொழி
வினையடை
421. பெயர்ச் சொற்களை விசேடிக்கும் அடைமொழி
பெயரடை
422. அரவிந்தி, வா பயப்படாதே
நீ தோன்றா எழுவாய்
423. 8ம் ஆம் வேற்றுமை
விளிவேற்றுமை எனப்படும்
424. அகச்சுட்டி ஒன்றைக் குறிப்பிடுக.
அவள்
425. முற்றியலுகரத்திற்கு உதாரணம்
முயல்
426. வினாச் சொல்லைத் தருக
விடை கமெண்ட் செய்யவும்
427. “சித்தரித்தனன்” இச்சொல்லின் விகுதியினைக் குறிப்பிடுக
சித்திரி
428. “நீ ஊருக்குப் போனது நல்லது” இவ்வாக்கியத்தில் ‘போனது’ என்ற சொல்
தொழிற்பெயர்
429. “பாடும் பாடல் புதுமையாக இருக்க வேண்டும். நல்ல பாட்டையே எல்லோரும் விரும்புவார்கள்” இவ்வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள புதுமையாக, நல்ல ஆகியவை எவ்வகைச் சொற்கள்
பெயரடை
430. “நீ ஏன் அடிக்கடி பாடசாலை போவதில்லை” இதில் வந்துள்ள “அடிக்கடி” என்பது
வினையடை
431. “மலை நாடுகளில் உயரமான மரங்கள் உண்டு” இதில் உயரமான என்பது
ஆக்கப் பெயரடை
432. புறச்சுட்டாக அமையும் சொல்
இப்புவி
433. ல, ள, கர ஈற்றுச் சொற்களின் முன் வல்லினம் வந்து புணர்ந்துள்ள சொல்
பாற்குடம்
434. “காண்மின்” எனும் வினையில் இடம்பெறும் விகுதி
மின்
435. “நட வினைமார்” எனும் வினையில் இடம்பெறும் விகுதி
மார்
436. “அவன் கரியன்” என்பது
விடை கமெண்ட் செய்யவும்
437. ஆக்கப்பெயர் விகுதிகளாக அமைவன
இயல், சாலி
438. (அ) நான் நன்றாகப் படிக்கிறேன்
(ஆ) பரீட்சையில் சித்தியடைவேன். இவ்வாக்கியங்களை இணைக்கும் பொருத்தமான இணைப்பிடைச் சொல்
ஆகவே
439. “கோதமனுடன் அகலிகை சென்றாள்” இதில் வந்துள்ள சொல்லுருபு
உடன்
440. “வண்ணம் வண்ணமான ஆடைகள்” இங்கு “வண்ணம் வண்ணமான’ என்பது
அடுக்குப் பெயரடை
441. “மாலதி இனிமையாகப் பாடினாள்” இதில் வந்துள்ள ‘இனிமையாக என்பது’
கூட்டு வினையடை
442. தனிப்பெயரடை விகுதிகளாக அமைவன
இய
443. ஆக்கப்பெயரடை விகுதிகளாக அமைவன
ஆன, உள்ள
444. “எத்தனையும் சாப்பிடுவேன்” இதில் வந்துள்ள “உம்” இடைச்சொல் தரும் பொருள்
முற்றுப்பொருள்
445. அரை மாத்திரை பெறும் எழுத்து
குற்றியலுகரம்
446. “அப்புத்தகத்திலுள்ள படங்களை அவள் எனக்குக் காட்டினாள்” இதில் வந்துள்ள புறச்சுட்டு
அப்புத்தகம்
447. “உனக்கு எப்பொருள் வேண்டும் என்று எப்படிச் சொல்வாய்” இதில் வந்துள்ள புறவினா
எப்பொருள்
448. “ஓடின” இதன் சரியான பகுப்பு
ஓடு + இன் + அ
449. “அருமருந்தன்ன பிள்ளை” இதில் வந்துள்ள ‘அருமருந்தன்ன’ என்பது
மரூஉ
450. நகர்புறம் என்பதை புறநகர் என்று சொல்வது
இலக்கணப்போலி
451. ஒலிமாறுபாடின்றித் தமிழில் வழங்கும் ஆரியச் சொல்லைத் தற்சமம் என்பர். தற்சமமாக வரும் சொல்.
காரணம்
452. காரணப் பொதுப்பெயர்
பறவை
453. உயர்திணை இருபாற்பொதுப் பெயர்
அறிவாளி
454. பெயரும், வினையும் இணைந்த கூட்டுப் பெயர்
தலையிடி
455. கொடுத்தல், பார்த்தல், வருதல் என்பன
தொழிற்பெயர்
456. “நேற்று நன்றாகப் படித்தவள் இன்றும் நன்றாகவே படிக்கின்றாள்” இதில் “படித்தவள்’ என்பது
வினையாலணையும் பெயர்
457. உருபுகள் இல்லாத வேற்றுமைகள்
ஒன்றும் எட்டும்
458. “மரத்துக்கு நீர் ஊற்றினார்” இதில் வந்துள்ள வேற்றுமை உருபு தரும் பொருள்
கொடை
459. “மாணவர்களுக்கு உரியது நல்லொழுக்கம்” இதில் வந்துள்ள ‘கு’ உருபு உணர்த்தும் பொருள்
தகுதிப்பொருள்
460. செயப்படுபொருள் குன்றியவினை வாக்கியம்
கண்ணன் நடந்தான்
461. செயப்படுபொருள் குன்றாத வினை வாக்கியம்
அவன் கடித்தான்
462. ஒற்றளபெடையாக அமைவது
கலங்கு
463. இதழ் குவிந்து ஒலிக்கும் உயிரெழுத்து
ஓ
464. உச்சரிப்பு முறையில் தகரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல்
இதயம்
465. நான்கு உயிரோடு மட்டும் சேர்ந்து மொழி முதலில் வரும் மெய்யெழுத்து
ஞ்
466. அகப்புணர்ச்சி இடம்பெறும் சொல்
போகின்றார்
467. குற்றியலுகரப் புணர்ச்சியாக அமைவது
பட்டாடை
468. காரண இடுகுறிப் பெயராக அமையும் சொல்
முள்ளி
469. “நான் தந்தியடித்தேன்” இங்கு தந்தியடி என்பது
கூட்டுவினை
470. பெய்யும் மழை என்பதில் ‘பெய்யும்’ என்பது
பெயரெச்சம்
471. “இசைக்கச்சேரியில் திலகநாயகம்போல் பாடினார்” இங்கு ‘உம்’ இடைச்சொல் உணர்த்தும் பொருள்
விடை கமெண்ட் செய்யவும்
472. கடற்கரை எனும் தொடர் எவ்வகைத் தொகை
வேற்றுமைத்தொகை
473. அவர்கள் சிறந்த தொழிலாளர்கள் எனும் வாக்கியத்தை முடிக்கும் சொல்
அல்லர்
474. சுட்டெழுத்துக்கள் எவை?
அ, இ, உ
475. எவ்வடிப்படையில் உயிரெழுத்துக்களை குறில், நெடில் எனப் பிரிக்கின்றோம்?
மாத்திரை
476. உடல், ஒற்று, புள்ளி என்று பெயர் பெறும் எழுத்து வகை
மெய்யெழுத்து
477. உதட்டுப் பல் ஒலியாக வரும் எழுத்து
வ்
478. இனவெழுத்து இல்லாத எழுத்துத் தொகுதி
இடையினம்
479. உடம்படுமெய் தோன்றப் புணர்ந்த சொல் அல்லாதது
பலாக்காய்
480. எண்ணுப் பெயரின் முன் வருமொழி முதலில் உயிர்வந்து புணர்வதைக் காட்டுஞ் சொல்
ஓராயிரம்
481. “குன்றினில் குமரன் கோவில் உண்டு” எனும் தொடரில் இடம்பெற்றுள்ள வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
482. திணை, பால் உணர்த்தும் விகுதிகள்
அன், ஆன், அள், ஆள்
483. “இரக்கப் போனாலும் சிறக்கப்போ” எனும் தொடரில் ‘உம்’ இடைச்சொல் உணர்த்தும் பொருள்
எதிர்மறைப்பொருள்
484. வினைத்தொகையாக அமைவது
ஏவுகணை
485. செயப்படுபொருள் குன்றிய வாக்கியமாக அமைவது
இராமன் சிரித்தான்
486. காலங்காட்டா இடைநிலைக்கு உதாரணம்
கலைஞன்
487. பிறவினை கொண்ட வாக்கியமாக அமைவது
அம்மா சோறு ஊட்டுகிறாள்
488. தன்வினையாக அமைந்து வரும் வாக்கியம்
அவன் சந்தியில் திரும்பினான்
489. எதிர்மறை ஏவல் பன்மையாக வருவது
செய்யாதீர்கள்
490. விகுதி மூலம் காலம் காட்டுவது
ஓடும்
491. குற்றியலுகரப் புணர்ச்சியாக அமைந்து வருவது
மார்பை
492. எழுத்துப் பிழை, இலக்கணப்பிழையின்றி அமைந்த வாக்கியம்
உழைத்து வாழவேண்டும்
493. கெடுதல் விகாரப்புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு
மரவேலி
494. இடுகுறிப்பெயருக்கு உதாரணம்
மண்
495. விளக்கு உடைந்தது
தானியாகுபெயர்
496. உரிச்சொல் ஒன்றை எழுதுக.
சாலச்சிறப்பு
497. தொகைநிலைத் தொடருக்கு உதாரணம்
வீடு கட்டினான்
498. செயற்படுபொருள் குன்றாத வினை
உண்டான்
499. பால் காட்டும் முற்று விகுதி பெறாது குறைச் சொல்லாய் பெயரைக் கொண்டு முடிவது
உண்ட மனிதன்
500. சொற்கள் இலக்கண அடிப்படையில் எத்தனை வகைப்படும்
பெயர் /வினை / இடை / உரி
How to Use This PDF for TNPSC and Other Exams:
- Download the PDF: Get the “இலக்கணம் – 500 முக்கிய வினா விடைகள்” PDF to start your TNPSC and Other Exam preparation.
- Focus on Key Topics: Study the important areas like Tamil Grammar, Sentence Formation, Vocabulary, and General Knowledge for a complete understanding.
- Practice Regularly: Use the practice questions and answers to assess your preparation.
- Review Mistakes: After solving the questions, review the answers and understand the concepts behind each correct response.
- Use for Final Revision: This PDF will serve as an excellent reference for the final exam revision phase.
🌐 Important Website and Social Media Links:
- 🌍 Official Website: Tamil Mixer Education
- 💬 WhatsApp Group: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 PDF Collections:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 இலக்கணம் – 500 முக்கிய வினா விடைகள் – Download now and boost your exam preparation!
