தமிழக மாணவர்களுக்கு கோடை
விடுமுறை எத்தனை நாட்கள்
?
12 ஆம்
வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு இந்தாண்டு 12 நாட்கள் மட்டுமே
கோடை விடுமுறை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா
காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள்
திறக்கப்பட்ட நிலையில்
பொதுத்தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என தமிழக
அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது 10 மற்றும் 12 ஆம்
வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை அமைச்சர்
அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தேர்வுகள்
மே மாதம் தொடங்கி
ஜூன் மாதம் முதல்
வாரத்திற்குள் முடிவடையும் நிலையில் கோடை விடுமுறை
வழங்கப்படுமா என்ற
எதிர்பார்ப்பு மாணவர்களிடையே இருந்தது. இந்நிலையில் 2022-23 ஆம்
ஆண்டிற்கான கல்வியாண்டில் 11 ஆம்
வகுப்பு தவிர அனைத்து
மாணவர்களுக்கும் ஜூன்
13 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில்
மகேஸ் அறிவித்துள்ளார். 11 ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு ஜூன்
24ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
அதன்படி
1 – 9 வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தாண்டு 30 நாட்கள் கோடை
விடுமுறை விடப்பட்டுள்ளது. 11 ஆம்
வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு இந்தாண்டு 23 நாட்கள் கோடை
விடுமுறை. மேலும் 12 ஆம்
வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு இந்தாண்டு 12 நாட்கள் மட்டுமே
கோடை விடுமுறை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


