பெண்கள் சுய
தொழில் துவங்க உதவி – கூட்டுறவுத்துறை அழைப்பு
கூட்டுறவு
துறை மூலம் பெண்களுக்கு சுய தொழில் துவங்க
கடனுதவி வழங்கப்படுகிறது. நீலகிரி
மாவட்ட மத்திய கூட்டுறவு
வங்கியின் கீழ், 22 கிளைகள்
செயல்படுகிறது.
இந்த
கிளைகளில் மாதம், 4 ஆயிரம்
ரூபாய்க்கு குறைவான வருமானம்
உள்ள வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு
சுய தொழில்கள் துவங்க
கடன் உதவி வழங்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில்,
கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற
விதவைகளுக்கு, தையற்கடை,
இட்லி கடை, காய்கறி
கடை, பழக்கடை, மீன்
கடை, பூக்கடை, பால்
கடை, துணி வியாபாரம்,
கூடை முடைபவர் உள்ளிட்ட
சிறு தொழில்களுக்கு ஒரு
ஆண்டுக்கு, 5 சதவீத வட்டியில்,
120 நாட்களில் திருப்பி செலுத்தும் வகையில், 5,000 ரூபாய் முதல்
அதிகபட்சம், 25 ஆயிரம் ரூபாய்
வரை கடன் வழங்கப்படும்.
மாதம்
இருமுறை கடன் தொகையை
தவணை முறையில் திருப்பி
செலுத்தலாம். 25 ஆயிரம் ரூபாய்
கடன் பெறுபவர்களிடம், 120 நாட்களுக்கு அதிகபட்சமாக, 411 ரூபாய் மட்டும்
வட்டி வசூலிக்கப்படும். தகுதி
வாய்ந்தவர்கள் அனைத்து
வேலை நாட்களிலும் தங்கள்
பகுதியில் உள்ள மத்திய
கூட்டுறவு வங்கி கிளைகளை
அணுகி உரிய விண்ணப்பங்கள், ஆவணங்களை அளித்து கடன்
பெற்று கொள்ளலாம்.