TAMIL MIXER EDUCATION.ன்
சுயதொழில் செய்திகள்
வேளாண் சார்ந்த
தொழில் தொடங்க கடனுதவி
பெறலாம்
– சிவகங்கை
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிவகங்கை
மாவட்டத்தில் 12 வட்டாரங்களில் உள்ள 113 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம
ஒருங்கிணைந்த வேளாண்
வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வேளாண்மை,
தோட்டக்கலை, வேளாண் வணிகம்,
வேளாண் பொறியியல் ஆகிய
துறைகளில் இளநிலை பட்டப்பிரிவில் சான்றிதழ் பெற்ற இளம்
தொழில் முனைவோர், அக்ரி
கிளினிக் அல்லது வேளாண்
சார்ந்த தொழில் தொடங்க
25 சதவீத மானியத்துடன் கடனுதவி
(அதிகபட்ச நிதி உதவியாக
ரூ. ஒரு லட்சம்)
வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் 21 வயது
முதல் 40 வயதுக்குள் இருக்க
வேண்டும்.வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பிரிவில்
குறைந்தபட்சம் இளநிலையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அரசு மற்றும்
தனியார் நிறுவனத்தில் பணியில்
இருக்கக் கூடாது. விண்ணப்பதாரா் கணினித்திறன் பெற்றிருக்க வேண்டும்.
ஒரு
குடும்பத்திற்கு ஒரு
வேளாண் பட்டதாரி மட்டுமே
நிதியுதவி பெற தகுதியுடையவா். எனவே மேற்கண்ட தகுதியுடைய தொழில் தொடங்க விரும்பும் வேளாண் பட்டதாரிகள் உரிய
விண்ணப்பத்துடன், விரிவான
திட்ட அறிக்கை, கல்விச்
சான்றிதழ், குடும்ப அட்டை,
வங்கிக் கணக்கு புத்தகம்
உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த
வேளாண்மை உதவி இயக்குநா்
அலுவலகத்தைத் தொடா்பு
கொண்டு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow