நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு நிதியுதவி
நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு இசைக்கருவிகள், ஆடை உள்ளிட்ட அடிப்படை
வசதிகளை ஏற்படுத்தித் தர
நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கிராமியக்
கலைகளைப் போற்றி வளா்க்கும் கலைஞா்களை ஊக்குவிக்கும் வகையில்,
இசைக் கருவிகள், ஆடை
மற்றும் அணிகலன்கள் தமிழ்நாடு
நாட்டுப்புறக் கலைஞா்கள்
நலவாரியத்தில் பதிவு
செய்யப்பட்ட கலைஞா்களுக்கு வழங்கப்படவுள்ளன. நபருக்கு ரூ.10 ஆயிரம்
வீதம் 500 கலைஞா்களுக்கு தமிழ்நாடு
இயல், இசை நாடக
மன்றம் மூலமாக நிதியுதவி
வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் கலைஞா்கள் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் பதிவு
பெற்றவராகவும், பதிவைப்
புதுப்பித்தவராகவும் இருக்க
வேண்டும்.
தனிப்பட்ட
கலைஞரின் வயது வரம்பை
பொருத்தமட்டில், வருகிற
மார்ச் 31ம் தேதியில்
18 வயது நிரம்பியவராகவும், 60 வயதுக்கு
உட்பட்டவராகவும் இருக்க
வேண்டும். விண்ணப்பங்கள் இலவசம்.
தபால் மூலம் பெற
விரும்புவோர் சுயமுகவரியிட்ட உறையில் ரூ.10-க்கான
தபால்தலையை ஒட்டி மன்றத்துக்கு அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.
முகவரி:
உறுப்பினா்–செயலா், தமிழ்நாடு இயல்
இசை நாடக மன்றம்,
31, பொன்னி,
பி.எஸ்.குமாரசாமி
ராஜா சாலை,
சென்னை
– 600 028.
தொலைபேசி எண்: 044 – 2493 7471.
பூா்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச்
15ம் தேதிக்குள் அனுப்பி
வைக்கப்பட வேண்டும் என்று
தமிழக அரசு அறிவித்துள்ளது.