நாடு முழுவதும்
ரயில் நிலையங்களில் இலவச
WiFi
இந்தியாவில் செயல்பட்டு வரும் பெருநகர
ரயில் நிலையங்களில் இலவச
WiFi வழங்கும் திட்டத்தை கடந்த
2016 ஆம் ஆண்டு முதல்
மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் முக்கிய ரயில் நிலையங்களில் இந்த இலவச WiFi திட்டம்
அமல்படுத்தப்பட்டு, இதுவரை
6 ஆயிரம் ரயில் நிலையங்களில் இலவச WiFi பொருத்தப்பட்டுள்ளது.
அதாவது
ஒரு நாளில் பல்லாயிரக்கணக்கான பயணிகளுடன் இயங்கி
வரும் 400க்கும் மேற்பட்ட
ரயில் நிலையங்களில் WiFi செயல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ரயில்களுக்காக காத்திருக்கும் பயணிகள்
தங்களது நேரத்தை செலவிடுவதற்கு வசதியாக இந்த திட்டம்
துவங்கப்பட்டது. இந்த
திட்டம் முதலாவதாக மும்பை
ரயில் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று
வந்தது.
அதன்
படி இலவச WiFi இணைப்பானது மேற்கு வங்கத்தில் உள்ள
மிட்னாபூர் ரயில் நிலையத்தில் பொறுத்தப்பட்டவுடன் 5 ஆயிரம்
என்ற இலக்கை அடைந்தது.
இந்நிலையில் கடைசியாக கடந்த
15 ஆம் தேதி ஒடிசாவின்
அங்குல் மாவட்டத்தில் உள்ள
ஜரபாடா ரயில் நிலையத்தில், WiFi இணைப்பு பொருத்தப்பட்டது. இதன் அடிப்படையில் இலவச
WiFi இணைப்பு இதுவரை 6 ஆயிரம்
ரயில் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே
நிர்வாகம் தெரிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


