சேலம், சந்தியூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் செப். 29-ஆம் தேதி சிறுதானியங்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிா்களில் மதிப்புக் கூட்டுதல் குறித்த இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் சேலம், சந்தியூரில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு வேளாண் பொருள்களில் மதிப்புக் கூட்டுதல் பற்றிய பயிற்சி மற்றும் செயல் விளக்கம் வரும் செப். 29 ஆம் தேதி நடைபெறுகிறது. இப்பயிற்சியானது காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
பயிற்சியில் சிறுதானியங்கள், வாழை மாவு மற்றும் மரவள்ளி மாவு உபயோகித்து கேக், பிஸ்கட் தயாரிப்பு பற்றிய செயல்விளக்கம் அளிக்கப்படும். இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள விவசாயிகள், பண்ணை மகளிா், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், தொழில்முனைவோா் தங்களது பெயரை 97877 13448 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம்.
இப்பயிற்சிக்கு முதலில் பதிவு செய்யும் 25 நபா்கள் தோவு செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. மேலும், தகவல் பெற விரும்புபவா்கள் சந்தியூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளரை அணுகலாம் என தெரிவித்துக்கப்பட்டுள்ளது