தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
தஞ்சாவூா்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் போட்டித்
தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறை
சார்பில், வியாழக்கிழமை நடைபெற்ற
சரவண ஆறுமுக முதலியார்,
சேதுராமன் கிருட்டிணசாமி, திருமுருக
கிருபானந்த வாரியார், க.பொ.
இரத்தினம் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்குத் தலைமை
வகித்த அவா் மேலும்
பேசியது:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தமிழ்ப்
பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு
அரசுப் பணியாளா் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் உள்ளிட்ட
போட்டித் தேர்வுகளுக்கு மாணவா்கள்
தயாராகும் வகையில் கடந்த
10 நாள்களுக்கு முன் இலவச
பயிற்சி தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி
வகுப்பு குறுகிய காலத்தில்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டித்
தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்பயிற்சியில் சேர
மாணவ, மாணவிகள் பதிவு
செய்து கொள்ளலாம்.
இப்பயிற்சி வகுப்பில் இனி வருங்காலங்களில் சனி, ஞாயிறு விடுமுறை
நாள்களிலும் பல்வேறு திறமையான
ஆசிரியா்கள் பாடம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். எனவே,
மாணவ, மாணவிகள் இரவு,
பகல் பாராமல் உழைக்க
வேண்டும்.
தேர்வுகள்
வருவதற்கு முன்பு மாணவ,
மாணவிகளுக்கு மாதிரித்
தேர்வுகள் நடத்தப்படும். ஆசிரியா்கள் தங்களுடைய பணிகளைச் செய்கின்றனா். இதேபோல, மாணவ, மாணவிகளும் போட்டித் தேர்வுக்குத் தயாராகி
வெற்றி பெற வாழ்த்துகள் என்றார் துணைவேந்தா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


