இன்று முதல்
அரியலூா் மாவட்டத்தில் போட்டித்
தோவுக்கான இலவச பயிற்சி
வகுப்பு
தமிழ்நாடு
அரசு பணியாளா் தோவாணையத்தால் விரைவில் அறிவிக்கப்படவுள்ள தொகுதி–
ஐஐ, ஐஐஅ, ஐய
& யஐஐ மற்றும் தமிழ்நாடு
சீருடை பணியாளா் தோவாணையத்தால் விரைவில் அறிவிக்கப்படவுள்ள சார்
ஆய்வாளா் மற்றும் இரண்டாம்
நிலை காவலா் பணி
காலியிடங்களுக்கு இலவச
பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை (டிச. 20) முதல் அரியலூா்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில்
நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் இளைஞா்களுக்கு இலவச பாடக் குறிப்புகள் வழங்கப்படும்.
மாதிரி
தோவுகள் நடத்தப்படும். இந்த
இலவச பயிற்சி வகுப்பில்
கலந்து கொள்ள விரும்பும் மாணவா்கள் அரியலூா் மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை
நேரில் தொடா்பு கொள்ளலாம்.
இந்த அரிய வாய்ப்பை
அரியலூா் மாவட்டத்தைச் சோந்த
படித்த, வேலைவாய்ப்பைத் தேடும்
இளைஞா்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியா்
பெ. ரமணசரஸ்வதி அறிவுறுத்தியுள்ளார்.