இலவச தையல்
பயிற்சி – திருப்பூர்
அனுப்பர்பாளையத்தில் உள்ள கனரா
வங்கியின் சுய வேலை
வாய்ப்பு பயிற்சி நிலையத்தில், இலவச தையல் பயிற்சி
வகுப்பு, வரும் 28ம்
தேதி துவங்கி 30 நாட்கள்
நடைபெறும்.
திருப்பூர் மாவட்ட ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும்,
வறுமைக்கோட்டுக்கு கீழ்
உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 45 வயதுக்கு
உட்பட்டவர்களாக இருக்க
வேண்டும். தெக்கலுார், புதுப்பாளையம், கணியாம்பூண்டி, நம்பியாம்பாளையம், வேலாயுதம்பாளையம், செம்பியநல்லுார் பகுதிகளை சேர்ந்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வரும்
28ம் தேதி இதற்கான
நேர்காணல் நடைபெறும். கட்டணம்
கிடையாது.பயிற்சி முடித்தோருக்கு மத்திய அரசின் ‘ஸ்கில்
இந்தியா‘ சான்றிதழ் வழங்கப்படும்; தொழில் துவங்குவதற்கான கடன்
ஆலோசனைகள் வழங்கப்படும்.
அனுப்பர்பாளையம் புதுாரில், மாவட்ட தொழில்
மையம் எதிரே இயங்கும்
கனரா வங்கி கிராமப்புற வேலை வாய்ப்பு மையத்தை
அணுகி, விண்ணப்பிக்கலாம். ஆதார்,
வாக்காளர் அட்டை, ரேஷன்
கார்டு, வங்கி பாஸ்
புத்தகம் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு
வர வேண்டும்.
மேலும்
விவரங்களுக்கு: 99525 18441,
94890 43923.