நான் முதல்வன் திட்டம் : இந்த திட்டம் “2022 ஆம் ஆண்டு”, தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் , அரசு மற்றும் அரசு உதவி பெறும், பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் தனி திறமையை அடையாளம் கண்டு அதை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கம். ஆண்டுக்கு “10 லட்சம் இளைஞர்கள்” பயன்பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் “UPSC” தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மாதம் “7500” வழங்கப்படும் என்ற அறிவிப்பு, மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. மாணவர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்பையும் நடத்தி வருகிறது. இதன் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம் மூலம் “20 லட்சத்திற்கும்” அதிகமான இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் கிடைத்திருப்பது இந்த திட்டத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளை நோக்கி நம் நாட்டை சேர்த்த பல இளைஞர்கள் வேலைக்கு செல்கிறார்கள். வெளிநாடுகளில் ஓட்டுநர்களுக்கான தேவை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு “இலவச ஓட்டுநர் பயிற்சியை” தொடங்கிலுள்ளது தமிழக அரசு.
இதன் பயிற்சி முகாம்கள் : “தஞ்சாவூர், ரெட் ஹில்ஸ், மறைமலைநகர்” ஆகிய இடங்களில் செயல்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் மற்ற இடங்களுக்கும் இத்தகைய முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சிக்கான தகுதிகள்: 8வது, 10வது மற்றும் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். இந்த பயிற்சியின் மூலம் நாம் வெளிநாடுகளில் ஓட்டுநர் பணிகளுக்கு செல்லும் வாய்ப்பை பெற முடியும்.
Register: https://www.naanmudhalvan.tn.gov.in/
Iam interested
No