சிறு தொழில்
முனைவோருக்கு இலவச
ஆலோசனை முகாம்
புதிய
தொழில் முனைவோருக்கான இலவச
ஆலோசனை முகாம் பிப்.
28ல் சின்னாளபட்டி அருகே
நடக்கிறது.
இந்திய
அரசின் சிறு, குறு,
நடுத்தர தொழில் நிறுவன
வளர்ச்சி நிலையம் சார்பில்
புதிய தொழில் முனைவோருக்கு இலவச ஆலோசனை முகாம்
சின்னாளபட்டி அருகே
நடக்க உள்ளது.திண்டுக்கல்– – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஊத்துப்பட்டி ஏ.ஆர்.ஸ்கூல்
ஆப் பிசினஸ் கல்லூரி
வளாகத்தில் பிப். 28ல்
முகாம் நடக்கிறது.
புதிய
தொழில் தொடங்குதல், வங்கி
கடன் பெறுதல், அரசு
மானியம் பெறுதல், சிறு
குறு தொழில் நிறுவன
பதிவு முறை, ஏற்றுமதி
வாய்ப்புகள், வளர்ந்த தொழிலதிபர்களின் வழிகாட்டுதல், பல்வேறு
துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை உள்ளிட்ட அம்சங்கள்
இடம்பெறும். இதில் அனைத்து
தரப்பினரும் பங்கேற்கலாம்.
விபரங்களுக்கு: 98470 35441.