TAMIL MIXER EDUCATION.ன்
வங்கி
தேர்வு
பற்றிய செய்திகள்
தாட்கோ மூலம்
வங்கி தேர்வில் வெற்றி
பெற இலவச பயிற்சி
தாட்கோ
மூலம் ஆதிதிராவிடர், பழங்குடின
பட்டதாரிகளுக்கு வங்கி
தேர்வில் வெற்றி பெற
இலவச பயிற்சி திட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
வங்கி
தேர்வுகளில் ஒன்றான IBPS CRP PO/MT
CRP-XII 2022ம் ஆண்டிற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு www.ibps.in என்ற
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
IBPS CRP PO/MT
CRP-XII 2022 தேர்வானது 11 பொதுத்துறை வங்கிகளில் பணிபுரிய மொத்தம் 6,932 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
20 முதல்
35 வயது வரை உள்ள
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அனைத்து ஆதிதிராவிடர் / பழங்குடியின பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். வருகிற 22ம்(22.08.2022) தேதிக்குள் www.ibps.in என்ற இணையதளம்
வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கி
தேர்வில் பணியமர வேண்டுமென
வெராண்டா ரேஸ் நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர்/பழங்குடியின மாணவர்களுக்கு இலவச
பயிற்சி வழங்க தாட்கோ
நிறுவனமானது முடிவு செய்துள்ளது.
இப்பயிற்சியினை பெற www.tahdco.com
என்ற இணையதளத்தில் பதிவு
செய்ய வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow