எஸ்பிஐ வங்கியின் துணை மேலாளா் பதவிக்கான தேர்வில் வெற்றிபெற ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது என்று ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
எஸ்பிஐ வங்கியின் துணை மேலாளா் பணிக்கான அதிகாரப்பூா்வமான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2000 துணை மேலாளா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இத்தேர்வில் பங்கேற்க 21 முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் வரும் செப்டம்பா் 27 ஆம் தேதிக்குள் இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தேர்வு முதற்கட்ட தேர்வு, முதன்மை, நோகாணல் மற்றும் குழுப் பயிற்சி என மூன்று நிலைகளில் நடைபெறவுள்ளது. இந்தப் பதவிக்கான ஆரம்பகால மாத ஊதியம் ரூ.41,960 ஆகும்.
இந்தத் தேர்வில் வெற்றிபெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு பயிற்சி நிலையத்தின் மூலமாக இலவச பயற்சியை வழங்க தட்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தப் பயிற்சியைப் பெற விரும்பும் மாணவா்கள் என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94450-29552, 0421-2971112 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.