மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.சென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் பங்கேற்க ஆயத்த பயிற்சி அளிக்கிறது.கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம்.
இப்பயிற்சி பெற விரும்புவோர், www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பிக்க வேண்டும்.விபரங்களுக்கு, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடம்-7வது தளம், ஈரோடு – 638011 என்ற முகவரியிலோ அல்லது, 0424– – 2221912 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

