திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், சீருடை பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை துவங்குகிறது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும், இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணிக்கு, 3,359 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். www.tnusrb.tn.gov.in என்கிற இணையதளத்தில், வரும் செப்., 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், திருப்பூர் கலெக்டர் அலுவலக நான்காவது தளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (ஆகஸ்ட் 31ம் தேதி) துவங்கியது. வாரந்தோறும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மதியம், 2:30 முதல் மாலை, 4:30 மணி வரை வகுப்பு நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.