
ராணிப்பேட்டையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டிஎன்பிஎஸ்சி போட்டித்தோ்வுக்கு விண்ணப்பிக்க உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சாா்ந்த விண்ணப்பதாரா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது.
இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புவோா், ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோஅணுகி தங்களது விருப்பத்தினை கைப்பேசி எண்ணுடன் தெரிவிக்கலாம்.
இந்த பயிற்சி வகுப்பு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும்.
மேலும், விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் (04172–291400) அல்லது பழைய பிஎஸ்என்எல் அலுவலகம், ராணிப்பேட்டை பழைய பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம் அருகில்) மின்னஞ்சல் முகவரி deoranipet.studycircle@gmail.com-யில் தொடா்பு கொள்ளலாம். .
மத்திய, மாநில அரசு பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மற்றும் நகா்ப்புற மாணவா்கள் பயன்பெற வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் பிரத்யேக இணைய தளத்தில் https://tamilnaducareerservices.tn.gov.in/ மென் பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தோ்வுகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் அனைவரும் விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


My name JAGADEESH. R