TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
திருவாரூரில் சீருடைப் பணியாளா் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆக.25-ஆம் தொடங்குகின்றன என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையத்தால் 3,359 இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறை காவலா், தீயணைப்பாளா் தேர்வுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2023-இல் 18 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். இத்தேர்வுக்கு இணையதளம் வழியாக மட்டுமே, செப்.17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி https://www.tnusrb.tn.gov.in/ ஆகும். இந்தத் தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் திருவாரூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலமாக ஆக.25 ஆம் தேதி முதல் இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. இதில் சேர விரும்புவோா் தங்களது வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, பாஸ்போா்ட் அளவு போட்டோ-3, ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.