சமூக ஊடகமான யூ-டியூப் வழியே குடிமைப் பணித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அண்ணா மேலாண்மை நிலையம் அறிவித்துள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இதுகுறித்து, அந்த நிலையத்தின் இயக்குனர் வெ. இறையன்பு, வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவுப்பு: கொரோன இரண்டாவது அலை பரவலைக் கருத்தில் கொண்டு அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நேர்முகமாக நடைபெறும் அனைத்து வகையான பயிற்சிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த தடை காரணமாக பயிற்சி நிலையத்தில் பயின்று வந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சமூக ஊடகமான யூ-டியூப் வழியே குடிமைப் பணித் தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும். AICSCC TN (Click Here) மற்றும் AIM TN (Click Here) ஆகிய யூ-டியூப் குறியீடுகள் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் வழியே குடிமைப் பணித் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.
மேலும் அரசு ஊழியர்களுக்கான மேலாண்மை பயிர்ச்சியும் அதன் வழியே அளிக்கப்படும்.


