Home Blog நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம் – மாணவர்களுக்கு ஒரு வருடம் மிச்சம்

நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம் – மாணவர்களுக்கு ஒரு வருடம் மிச்சம்

0

Four-year integrated teacher education program - one year left for students

நான்கு வருட
ஒருங்கிணைந்த ஆசிரியர்
கல்வி திட்டம்மாணவர்களுக்கு ஒரு வருடம் மிச்சம்

முழுமையான
இரட்டை இளநிலை படிப்புகளான B.A B.Ed, B.Sc
B.Ed

மற்றும் B.Com
B.Ed

ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு
வருட ஒருங்கிணைந்த ஆசிரியர்
கல்வி திட்டத்தை கல்வி
அமைச்சகம் அறிவித்துள்ளது.

முதல்கட்டமாக, நாடு முழுவதும் உள்ள
தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பல்முனை
கல்வி நிறுவனங்களில் ஆரம்பத்தில் இது செயல்படுத்தப்படும் என
கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2030க்குள்
நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கான செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கேற்ப மத்திய அரசு
கடந்தாண்டு தேசிய கல்விக்
கொள்கை, 2020க்கு ஒப்புதல்
அளித்தது.இந்த தேசிய
கல்வி கொள்கை 2020ன்
படி, ஒருங்கிணைந்த ஆசிரியர்
கல்வி திட்டத்தின் மூலமாக
மட்டுமே 2030ம் ஆண்டில்
இருந்து ஆசிரியர் செயல்பாடுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போதுள்ள 5 வருட திட்டத்துடன் ஒப்பிடும்
போது நான்கு வருடங்களிலேயே இந்த கல்வி நிறைவடைவதால் மாணவர்களுக்கு ஒரு
வருடம் மிச்சமாகும். 2022-2023ம்
கல்வி ஆண்டில் இருந்து
நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம்
தொடங்கும் என்று கல்வி
அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தின் கீழ், கல்வி துறைக்கான
பட்ட படிப்போடு (B.ED) வரலாறு,
கணிதம், அறிவியல், கலை,
பொருளாதாரம் அல்லது வணிக
பிரிவுகளிலும் பட்டப்படிப்பை இத்திட்டம் வழங்கும். இதற்கான
பாடத் திட்டத்தை கல்வி
அமைச்சகத்தின் கீழ்
செயல்படும் தேசிய ஆசிரியர்
கல்விக் குழு வடிவமைத்துள்ளது.

மேலும்,
ஆரம்ப குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி, அடிப்படை
எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு, ஒருங்கிணைந்த கல்வி,
இந்தியா மற்றும் அதன்
விழுமியங்கள், கலைகள்,
கலாச்சாரங்கள் குறித்த
புரிதல் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம்
வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய
தேர்வு முகமை மூலம்
தேசிய பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு இதற்கான
சேர்க்கை நடைபெறும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version