துபாய் நாட்டில்
இனி வெளிநாட்டு மக்களும்
அமீரக குடியுரிமை பெறலாம்
முதன்முறையாக வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க முடிவு செய்யபட்டுள்ளதாக ஐக்கிய அரபு
எமிரேட்ஸின் பிரதமர் ஷேக்
முகமது பின் ராஷேத்
அல் மக்தூம் அறிவித்துள்ளார்
பொருளாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு
நடவடிக்கைகளின் ஒரு
பகுதியாக இந்தத் திட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
வரலாற்று சிறப்புமிக்க புதிய
சட்ட திருத்தம் குறித்த
அறிவிப்பை ஐக்கிய அரபு
அமீரகத்தின் பிரதமரும் துபாய்
ஆட்சியாளருமான ஷேக்
முகமது பின் ரஷீத்
அல் மக்தூம் அவர்கள்
அறிவித்துள்ளார்.
யாருக்கெல்லாம் குடியுரிமை வழங்கப்படும்:
சிறந்த
முதலீட்டாளர்கள்,
மருத்துவ வல்லுநர்கள்,
பொறியாளர்கள்,
தொழில் வல்லுநர்கள்
கலைஞர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளிட்டவர்கள் குடியுரிமை பெற தகுதியுடையவர்கள் என்றும்
அறிவித்துள்ளார்
இது
குறித்து அவர் தனது
ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவதுபுதிய வழிமுறைகள் எங்கள்
வளர்ச்சி பயணத்திற்கு பங்களிக்கும் திறமைகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அமீரகத்தில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளதாக அமீரக அரசு
அறிவித்திருக்கிறது. இந்த
திருத்தத்தின் அடிப்படையில் மருத்துவர்கள், அந்நிய
நாட்டு முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள், திறமை வாய்ந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அமீரக குடியுரிமை வழங்கப்பட இருக்கிறது.
இத்தகைய
திறன் வாய்ந்தவர்கள் மற்றும்
அவர்களது குடும்பத்தினருக்கு குடியுரிமை வழங்குவதன் மூலமாக அமீரகத்தின் மேம்பாட்டை துரிதப்படுத்தலாம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக்
கலீஃபா பின் சயீத்
அல் நஹ்யான் அவர்கள்
முன்மொழிந்த இந்த சட்ட
திருத்தத்திற்கு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும்
துபாயின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது
பின் ரஷீத் அல்
மக்தூம் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த
சட்ட திருத்தத்தின் மூலமாக
திறன்மிகு நபர்களின் மனைவி
மற்றும் குழந்தைகளுக்கும் குடியுரிமையானது வழங்கப்படும். அதேநேரத்தில் அவர்களது தற்போதைய குடியுரிமையையும் அவர்கள் வைத்துக்கொள்ளலாம். முந்தைய சட்டத்தில் இதற்கு இடமில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை
பெறுவதற்கான தேவைகள்:
முதலீட்டாளர்கள்: கண்டிப்பாக அமீரகத்தில் சொத்து
இருத்தல் வேண்டும். மருத்துவர்கள் மற்றும் திறன்மிகு பணியாளர்கள்: அமீரகத்திற்குத் தேவையான
ஒரு தனித்துவமான விஞ்ஞானத்
துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். அவர்களின் துறையில்
விஞ்ஞான மதிப்பைக் கொண்ட
ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு பங்களித்திருக்க வேண்டும்.
அந்த துறையில் 10 வருட
அனுபவம் பெற்றவராக இருத்தல்
வேண்டும். மேலும், அவரது
துறையில் ஒரு மதிப்புமிக்க தொழில்முறை அமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
அறிவியலாளர்கள்:
தங்களது அறிவியல் துறையில்
பல்கலைகழகத்திலோ, ஆராய்ச்சி
மையத்திலோ அல்லது தனியார்
ஆராய்ச்சி நிலையத்திலோ ஆய்வு
செய்பவராக இருத்தல் வேண்டும்.
குறைந்தது 10 வருடங்கள் அந்தத்
துறையில் இருந்திருக்க வேண்டும்.
தங்களுடைய ஆய்வுகளுக்காக தனித்துவமான விருதுகளையோ அல்லது ஆய்வுகளுக்கான நிதியையோ கடந்த 10 வருட
அனுபவத்தில் பெற்றவராக இருத்தல்
வேண்டும். அமீரகத்தில் உள்ள
ஆய்வு நிறுவனத்திடம் இருந்து
பரிந்துரை கடிதம் பெற்றிருக்கவேண்டும்.
திறன்மிகு
மக்கள்:
முதலீட்டாளர்கள்:
அமீரக பொருளாதாரத்துறை அமைச்சகம்
அல்லது இது தொடர்பான
அங்கீகாரம் பெற்ற சர்வதேச
அமைப்பிடம் இருந்து காப்புரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
முக்கியமாக அது அமீரகத்தின் பொருளாதாரத்திற்கு மதிப்பளிக்கும் விதமாக இருத்தல் வேண்டும்.
அதேபோல, அமீரக பொருளாதாரத்துறை அமைச்சகத்திடம் பரிந்துரை
கடிதம் பெற்றிருக்க வேண்டும்.
அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்கள்: கலாச்சாரம் கலை மற்றும் பிற
துறைகளில் முன்னோடியாக இருத்தல்
வேண்டும். தங்களுடைய உழைப்பிற்கு சர்வதேச விருதுகளைப் பெற்றவராக
இருக்கவேண்டும். இதுகுறித்த அமீரக அமைப்புகளில் இருந்து
பரிந்துரை கடிதத்தையும் அவர்
பெற்றிருக்க வேண்டும்.
நிபந்தனைகள்:
இந்தப்
புதிய சட்டம், திறமைசாலிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான விதிமுறை மற்றும் நிபந்தனைகளையும் வெளியிட்டுள்ளது. அதாவது,
சத்தியப் பிரமாணம் எடுத்தல்,
அமீரகத்திற்கு விசுவாசமாக இருப்பதாக சத்தியம் செய்தல்,
நாட்டின் சட்டங்களை நிலைநிறுத்துவேன் எனவும் அவற்றை
மதித்து செயல்படுவேன் எனவும்
உறுதிமொழி அளித்தல், புதிதாக
குடியுரிமை ஒன்றினைப் பெற்றாலோ
அல்லது இழந்தாலோ சம்பந்தப்பட்ட அமீரக துறையிடம் தெரிவிப்பது ஆகியவனவாகும்.
அதேபோல,
இந்த சட்டம் புதிதாக
குடியுரிமை பெறுபவர்களுக்கான உரிமைகளையும் பட்டியலிட்டுள்ளது. அவை,
அமீரகத்தில் தங்களது நிறுவனங்களை நிறுவுவது, நிலங்களை வாங்குவது
மற்றும் விற்பது, ரியல்
எஸ்டேட்டில் பங்கேற்பது, பெடரல்
அமைப்புகள், கேபினட் அல்லது
உள்ளூர் அரசின் அனுமதியின் பெயரில் அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளில் நீட்டிப்பு செய்வது.
அதேவேளையில், சட்ட ஒருமைப்பாட்டை மீறுதல்
மற்றும் மேற்கண்ட விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறும்
பட்சத்தில் புதிதாக வழங்கப்படும் இந்த குடியுரிமையானது பறிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை
வழங்கப்படும் முறை
மேற்கண்ட
நபர்களுக்கு குடியுரிமை வழங்கும்
தேர்வை ஒவ்வொரு எமிரேட்டிலும் உள்ள ஆட்சியாளர்களின் நீதிமன்றம், பட்டத்து இளவரசர்களின் நீதிமன்றம், எமிரேட்டின் நிர்வாக சபை
அல்லது கேபினெட் மேற்கொள்ளும்.
தேசியம்
மற்றும் பாஸ்போர்ட்டிற்கான சட்டம்
எண் 17, 1972 ல்
மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மாற்றம் இதுவாகும். 2019 ஆம்
ஆண்டில் அமீரகத்தில் 5 முதல்
10 வருடங்களுக்கான கோல்டன்
விசா அறிமுகப்படுத்தப்பட்டது. பல்துறை
வல்லுனர்கள் அமீரகத்தில் நெடுநாள்
வாழ வழிவகை செய்வதன்
மூலமாக, சமூக கட்டுமானத்தை அறிவுசார் சமூகமாக மாற்றும்
நோக்கில் அமீரகம் இத்தகைய
நடவடிக்கைகளை முன்னெடுத்தது. கடந்த இரண்டு வருடங்களில் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பல்துறை வல்லுனர்கள், பொறியாளர்கள் போன்ற
ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த கோல்டன்
விசாவானது வழங்கப்பட்டிருக்கிறது.
திறமைசாலிகளுக்கு குடியுரிமை வழங்கி
சமூக ஸ்திரத்தன்மையை அதிகப்படுத்துவது என்னும் வளர்ந்த
நாடுகளின் முறையை இந்த
சட்டத் திருத்தத்தின் மூலம்
அமீரகமும் பின்பற்றத் துவங்கியுள்ளது.