HomeBlogஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான, வழிகாட்டுதல் - அண்ணா பல்கலைக்கழகம்
- Advertisment -

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான, வழிகாட்டுதல் – அண்ணா பல்கலைக்கழகம்

For Online Semester Exam, Guidance - Anna University

ஆன்லைன் செமஸ்டர்
தேர்வுக்கான, வழிகாட்டுதல்
அண்ணா பல்கலைக்கழகம்

ஆன்லைன்
செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும்
Take home
முறையில் செமஸ்டர் தேர்வு,
நடைபெறும் எனவும், ஒரு
மணி நேர தேர்வுக்கு பதிலாக 3 மணி நேர
தேர்வாக நடைபெறும் என
அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும்
செல்போன், லேப்டாப் உள்ளிட்ட
மின்னனு சாதனங்களை கொண்டு
தேர்வு எழுதலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாளில் பதிவு எண், பெயர்,
பாட குறியீடு, பாடத்தின்
பெயர் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு
பக்கத்தின் மேல் பகுத்தியில் குறிப்பிட வேண்டும் என
குறிப்பிடப்படுள்ளது.

தேர்வு
நடைபெறும் நாள், பக்க
எண், கையெழுத்தை ஒவ்வொரு
தாளின் கீழ் பக்கத்தில் குறிப்பிட வேண்டும் என
தெரிவிக்கப்படுள்ளது.மேலும்,
வினாத்தாள் கூகுள் க்ளாஸ்ரூம் அல்லது மின்னஞ்சல் வாயிலாக
அனுப்பப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியர்
மாணவர்கள், தாங்கள் இறுதியாக
பயின்ற கல்லூரிகளைத் தொடர்புகொண்டு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்
எனவும், ஒருவேளை மூடப்பட்ட
கல்லூரிகளில் படித்த
மாணவர்கள் அரியர் எழுத
விரும்பினால், அவர்களுக்கு வேறொரு கல்லூரி பொறுப்புக்கல்லூரியாக ஒதுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -