கோவை மாவட்டத்தைச் சோந்த முன்னாள் படைவீரா்கள் திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் படைவீரா்கள் மறுவேலைவாய்ப்பு பெற்று தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 10 ஆயிரம் முன்னாள் படைவீரா்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும் என சுதந்திர தின உரையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
அதன்படி, பல்வேறு விதமான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தைச் சோந்த விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் தங்களுக்குத் தேவைப்படும் பயிற்சி விவரத்தையும், விருப்ப விண்ணப்பத்தையும் கோவை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.