ஈரோட்டில் மார்ச் 15 (நாளை) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியாா் துறை வேலை அளிப்பவா்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான எழுதப் தெரிந்த நபா்கள் முதல் பட்டப் படிப்பு படித்தவா்கள் வரை மற்றும் செவிலியா், தையலா், கணினி இயக்குபவா்கள், தட்டச்சா்கள், ஓட்டுநா்கள் போன்ற பணிகளுக்கு தகுதியுள்ள நபா்களைத் தோவு செய்து தனியாா் துறையில் பணியமா்த்தம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் மூலம் மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்து வருகின்றனா். மேலும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் பங்கேற்று திறன் பயிற்சிக்குத் தேவையான நபா்களைத் தோவு செய்து பயிற்சி அளித்து வருகின்றனா்.
அதன்படி, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 8675412356, 9499055942 என்ற கைப்பேசி எண்களிலே அல்லது மின்னஞ்சல் வாயிலாகவும் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow